புதுதில்லி, நவ.22-

வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது பெமா மற்றும் பி.எம்.எல்.ஏ. சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப் படுத்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை (பிஎம்எல்ஏ) மத்திய அரசு சில மாதங் களுக்கு முன்பு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாடுகளில் கருப்புப் பணம், சொத்து களை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.அதன்படி 638 பேர் தாங்க ளாக முன்வந்து கருப்புப் பணம், சொத்து விவரங்களைத் தெரிவித்தனர். அவர்கள் ரூ.3770 கோடி அளவுக்கு கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த தொகைக்கு 30 சதவீத வரி, 30 சதவீத அபராதத்தை வரும் டிசம்பர் 31-க்குள் செலுத்த நிதி அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

எச்.எஸ்.பி.சி. பட்டியல்

சுவிட்சர்லாந்தின் எச்.எஸ். பி.சி. வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 628 பேரின் பட்டியலை பிரான்ஸ் அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் வழங்கியது. அவர்களில் 200 பேரின் முகவரியை கண்டுபிடிக்க முடிய வில்லை. மீதம் முள்ள 428 பேரின்வங்கிக் கணக்குகளில் ரூ.4500 கோடி இருப்பு இருந்தது தெரிய வந்தது.

இதில் 128 பேரின் வங்கிக் கணக்குகள் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்துரூ.3150 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ளவர் கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை முடிவு செய் துள்ளது. அதற்கான முதல்கட்ட விசாரணையை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக 140 பேர் குறித்த வரிஏய்ப்பு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.அவர்கள் மீது பெமா மற் றும் பி.எம்.எல்.ஏ. சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக் கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த கருப்புப் பணத்தையும் கைப்பற் றுவோம் என்று கதைகட்டிய மோடி அரசு, இன்னும் ஆமை வேகத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவு கூர வேண்டியது அவசியம்.

Leave A Reply

%d bloggers like this: