மதுரை,நவ.21-

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்:-சிபிஎம் கோரிக்கை

மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் பெய்த கனமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் 134.80 அடியும், வைகை அணை நீர்மட்டம் 64 அடியும் உள்ளது. மேலூர், திருமங்கலம், மதுரை கிழக்கு தாலுகா, மதுரை மேற்கு ஒன்றியம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி தாலுகா ஆகிய பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. கிணற்றுப்

பாசனம் உள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையில்
உள்ளன.

எனவே நெல் விவசாயத்தையும் விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்களையும் பாதுகாக்க வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளிக்குடி பகுதியில் பெய்த கனமழையால் நெல்வயல்களில் மழைவெள்ளம் தேங்கி பயிர்கள் பாதிப்புக்குள் ளாகின. ஆகையால் மாவட்டத்தில் உள்ள வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும். மடைகளை சீரமைக்க வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.