சேலம், நவ. 21-

விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா

விலையில்லா மடிக்கணினி மாணவ, மாணவியருக்கு வழங்கும் விழா சேலத்தில் சனியன்று நடைபெற்றது. சேலம் தியாகராஜர் பல்தொழில் நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றுது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை தாங்கினார். சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெருஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 266 மாணவ – மாணவிகளுக்கு ரூ.37.69 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் சி.வள்ளியப்பா, முதல்வர் முனைவர் வீ.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: