தேனி:-

முல்லைப் பெரியாறு அணையில்  30-ம் தேதி மூவர் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில், நவம்பர் 30-ஆம் தேதி மூவர் குழு ஆய்வு மேற்கொள்கிறது. மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நாதன் தலைமையிலான இந்த குழுவினர், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மழைக்காலங்களில் பேபி அணையை பலப்படுத்துவது குறித்தும், அணையின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: