வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மீண்டும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை மீண்டும் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை, நவ. 21 –

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அண்மையில், அந்தமான் அருகேஉருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்தது. ஏரி, குளங்கள் உடைப்பெடுத்து, வீடுகளை மூழ்கடித்தது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல்வேறு இடங்களில் சுவர்கள், மரங்கள் இடிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு கூட கிடைக்காமலும் பெரும் இன்னலைச் சந்தித்தனர்.

குறிப்பாக சென்னையில் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மிகப்பெரிய அபார்ட்மெண்ட் வீடுகளில் வசித்து வந்தவர்களும் மழை வெள்ளத்தில் சிக்கித்
தவித்தனர். இப்போது வரை பல இடங் களில் வெள்ளம் வடியவில்லை.
வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் தற்போதுதான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங் களில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழைக்கு இதுவரை 230 பேர் பலி தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 230 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 53 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேரும், சென்னையில் 30 பேரும், விழுப்புரத்தில் 20 பேரும் பலியாகியுள்ளனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.