கோலாலம்பூர், நவ. 21-

மோடி நிகழ்ச்சியில் தலைகீழாகப் பறந்த தேசியக்கொடி

மலேசியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேசியக்கொடி தலைகீழாகப் பறந்தது. மலேசியாவில் 21 மற்றும் 22ம் தேதிகளில் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று உள்ளார்.அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கைகுலுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அவர்களின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடி தலைகீழாக பறந்தது தெரியவந்தது.

பிரதமர் மோடியும் முதலில் இதைகவனிக்கவில்லை. இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் மூலம் பரவியது. அங்குள்ள அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? என பலர் கருத்து தெரிவித்தனர். அதன் பின்னர், சரியாக ஏற்றப்பட்ட தேசியக் கொடியுடன் கூடிய புகைப்படங்களை அரசு இணையதளத்தில் அதிகாரிகள் வெளியிட்டனர். அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்டது தெரிய வந்தது.

Leave A Reply

%d bloggers like this: