புதுதில்லி, நவ.21-

போலிச் சாமியார் ராம்தேவின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான போலிச்சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி என்ற கார்ப்பரேட் கம்பெனியின் ஆண்டு வருமானம் 5000 கோடி ரூபாயை தாண்டுகிறது என்று அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளருமான ராம்தேவ் 1965ம் ஆண்டில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம் நொடித்துப் போனதால் ராம்தேவ் 1990 களில் தனது நண்பரான ஆச்சாரியா பால கிருஷ்ணாவுடன் இணைந்து யோகா வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். பின்னர் அதிலும் போதிய வருமானம் இல்லாததால் சைக்கிளில் நெடுந்தொலைவிலுள்ள சில வீடுகளுக்கு சென்று மத சடங்குகள் மற்றும் பூசைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அவர் தற்போது உலக கார்ப்பரேட்டுகளுக்கு போட்டியாக ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி ஈட்டும் அளவுக்கு ‘உயர்ந்துள்ளது’ இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் அதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வர்த்தக இதழில் வெளிவந்துள்ள செய்திகளில் கூறியுள்ளதாவது:-இந்தியாவில் ராம்தேவ் முதலில் ‘யோகி’ யாகத்தான் அதாவது முற்றும் துறந்த சாமியாராகத்தான் தனது அடையாளத்தை காட்டினார். ஆனால் தற்போது பெரிய அளவிலான பன்னாட்டு நுகர்பொருள்கள் தயாரிப் புக் கம்பெனிகளுக்கு போட்டியாக மூலிகை தேயிலை முதல் பழச்சாறுகள் மற்றும் கழிப்பறை கட்டுமானங்கள் தயாரிப்பது வரை ராம்தேவ் நடத் தும் ‘பதஞ்சலி’ கம்பெனி தயாரித்து வருகிறது. 2006ல் தனது நண்பர் பால கிருஷ்ணாவுடன் இணைந்து பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார். அக்கம்பெனியானது 10ஆண்டுகளில் உலக கம்பெனிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு‘முன்னேறியுள்ளது’. இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் ஆளும் பாஜகவின் ஆதரவுதான் என்பதை இங்கு கூற வேண்டியதில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மோடி,‘இந்தியாவில் தயாரி’ என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். அதிலிருந்து பதஞ்சலியின் உற்பத்தி பொருட்கள்யாவும் ‘பாரதத்தில் தயாரித்தது’ என்ற முத்திரையுடன் வெளிவரத் தொடங்கின. நெஸ்லே என்ற பன்னாட்டு கம்பெனியின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் குறுகிய காலம் தடை செய்யப்பட்டு பின்னர் வெளிவரத் தொடங்கியுள்ளது. இப்போது மேகிக்கு போட்டியாக பதஞ்சலி கம்பெனியும் நூடுல்ஸ் உணவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடுதான். மேகிக்கு இருந்த அரசின் கெடுபிடி எதுவும் இதற்கு இல்லை. அவ்வளவு ஏன், இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு எந்த தடையும் இன்றி சந்தையில் அனுமதித்துள்ளது. எல்லாம் மோடியின் ஆசிகளால்தான். இப்போது ஏன் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது என்பதற்கான காரணமும் உங்களுக்கு புரிந்திருக்கும்.ராம்தேவின் பதஞ்சலி கம்பெனி, விளையாட்டு உடைகள் மற்றும் கேன்வாஸ் மற்றும் பூட்ஸ்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நைக் மற்றும் அடிடாஸ் கம்பெனிகளுக்கு போட்டியாக தானும் இப்பொருட்களை உற்பத்தி செய்ய களத்தில் இறங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் பதஞ்சலி கம்பெனியின் உற்பத்தி பொருட்களை விநியோகிக்கும் பிட்டி என்ற கம்பெனியின் தலைவரான ஆதித்யா பிட்டி என்பவர், 2015ல் மட்டும் கம்பெனியின் லாப வளர்ச்சி ரூ.2000 கோடியை தாண்டிவிடும் என்று குறிப்பிடுகிறார். இக்கம்பெனியின் தயாரிப்பு பொருட்கள் நாடு முழுவதும் உள்ள 1,77,000 சில்லரை விற்பனை கடைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கம்பெனியின் வருமானம் இந்த நிதி ஆண்டில் ரூ.5000 கோடியை எட்டிப்பிடிக்கும் என்றும் அதன் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்திய கம்பெனிகள் பதிவாளரிடமிருந்து இதுகுறித்து எந்த தகவலும் பெற இயலவில்லை. ஏனெனில் ராம்தேவ் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் அதிகாரபீடங்கள் ரகசியம் காக்கின்றன. இத்தனைக்கும் கடந்த 2006ல் ஹரித்வாரில் வெறும் ரூ.41 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டதுதான் பதஞ்சலி நிறுவனம். இந்த அளவு முதலீடு எப்படி ஒரு யோகா சாமியாரிடம் வந்தது என்ற கேள்வி ஒரு புறமிருக்க இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ. 5000 கோடிக்கு எப்படி வளர்ந்தது என்பது அந்த மோடிக்கே வெளிச்சம். கடந்த அக்டோபரில் பியூச்சர் குழு என்ற கம்பெனி யிடம் பதஞ்சலி கம்பெனி அதன் தயாரிப்புகளை விநியோகிக்கவும் விளம்பரப்படுத்தவும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. மோடி அரசின் ஆதரவுடன் இந்துத்துவா பிரச்சாரத்துடன் யோகா மூலம் தனது நுகர்வோர் சந்தையை பிடித்துள்ளார் ராம்தேவ் என்று பொருளாதார அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.