ரியாத்,நவ.21–

பாலஸ்தீனிய பாடகருக்கு சவூதியில் மரண தண்டனை

பாலஸ்தீனத்தை சேர்ந்த பாடகர் அஷ்ரப் பயாத் சவூதி அரேபியாவின் அப்ஹா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் தனது பாடல்களில் மத எதிர்ப்புக் கருத்துக்களை எழுதியிருந்ததாக கூறி, அவர் மீது சவூதி அரேபியாவின் மதப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்தனர். மீண்டும் 2014-ஆம் ஆண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அஷ்ரப் பயாத்திற்கு 4 ஆண்டு சிறையும், 800 சவுக்கடிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்நிலையில், மேல் நீதிமன்றமானது, பயாத்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave A Reply