உடுமலை, நவ. 21-

left parties

பயன்படாத விதைகளை விற்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது. உடுமலை விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாச்சியர் சாதனை குறள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறியதாவது:-தற்போது மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் அணைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். மழையால் கிடைத்த தண்ணீரை முறையாக பயன்படுத்தாமல் சில பெரிய விவசாயிகள் பயன்படும் வகையில் பிஏபி நிர்வாகம் திருமூர்த்தி அணையின் பிரதான கால்வாயாக உள்ள கெடிமேடு வாய்காலில் தண்ணீர் திறந்து விட்டது ஏன் என்றும், இதனால் வருகின்ற மாதங்களில் பிஏபி பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படும். முளை திறன் இல்லாத விதைகளை விற்பனை செய்து விவசாயிகளை ஏமாற்றும் விதை நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை காலம் துவங்குவதற்கு முன்னரே விவசாய நிலங்களுக்கு குளங்களில் இருந்து மண் எடுப்பதை தடுத்த காரணத்தால் குளங்களில் கொள்ளளவு குறைத்து விட்டது. இனி வரும் காலங்களில் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பொதுப்பணிதுறையினர் செயல் பட வேண்டும் . மேலும் பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் பெயர் அளவில் மட்டுமே பாலை கொள்முதல் செய்கிறது. இதனால் தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை தர நிர்பந்தம் உண்டாகிறது. இதனை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலைக்கு பாலை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை இவ்வாறு விவசாயிகளை வஞ்சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள் திருமூர்த்தி மலையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு அழைப்புவிடுப்பது இல்லை. தற்போது அமராவதி அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறத்து விட வேண்டும். தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.இந்த கூட்டத்தில் மடத்துக்குளம் விவசாய சங்கத்தின் பன்னீர்செல்வம், கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.