திருப்பூர், நவ. 21-

திருப்பூர், நவ. 21-  திருப்பூரில் நடைபெற்ற புத்தக வசிப்பு நிகழ்ச்சியில் 17 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பூரில் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 13வது புத்தக திருவிழாவை முன்னிட்டு புத்தகத்திருவிழா வரவேற்புக்குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர், பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பள்ளியின் ஆசிரியர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில், வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியமானது, அதை நாம் எவ்வாறு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகளை புத்தக திருவிழாவின் வரவேற்புக்குழுவினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சார்ந்தவர்களும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.  இந்த வாசிப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிலையங்களில் இருந்து மொத்தம் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ”மனிதன் மகத்தானவன்“ என்ற சிறு புத்தகத்தினை வாசித்தனர்.முதல்கட்டமாக நடைபெற்ற இந்த வாசிப்பு இயக்கத்தை இரண்டாம் கட்டமாக கல்லூரிகள், இதர பள்ளிகளில் ஜனவரி மாதத்தில் விரிவானமுறையில் வாசிப்பு இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆசிரியை ஞானம்மாள், ஆசிரியர் கனகராஜ், புத்தக திருவிழாவின் வரவேற்ப்புக்குழு செயலாளர் முத்துக்கண்ணன், இணைச் செயலாளர் நந்தகோபால், தலைவர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் நடைபெற்ற புத்தக வசிப்பு நிகழ்ச்சியில் 17 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 13வது புத்தக திருவிழாவை முன்னிட்டு புத்தகத்திருவிழா வரவேற்புக்குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர், பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பள்ளியின் ஆசிரியர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில், வாசிப்பு பழக்கம் எவ்வளவு முக்கியமானது, அதை நாம் எவ்வாறு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகளை புத்தக திருவிழாவின் வரவேற்புக்குழுவினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சார்ந்தவர்களும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த வாசிப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிலையங்களில் இருந்து மொத்தம் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ”மனிதன் மகத்தானவன்“ என்ற சிறு புத்தகத்தினை வாசித்தனர்.முதல்கட்டமாக நடைபெற்ற இந்த வாசிப்பு இயக்கத்தை இரண்டாம் கட்டமாக கல்லூரிகள், இதர பள்ளிகளில் ஜனவரி மாதத்தில் விரிவானமுறையில் வாசிப்பு இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆசிரியை ஞானம்மாள், ஆசிரியர் கனகராஜ், புத்தக திருவிழாவின் வரவேற்ப்புக்குழு செயலாளர் முத்துக்கண்ணன், இணைச் செயலாளர் நந்தகோபால், தலைவர் சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: