திருப்பூர், நவ. 21-

http://epaper.theekkathir.org/epapers/1/3/2015/11/22/files/News_139858.jpg

திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சிறப்புக் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தமுஎகச திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார்.கவியரங்கத்தில் உணவும், உரிமையும் என்ற தலைப்பில் கவிஞர் மகுடேஸ்வரன், கோவை சதாசிவம், சோ.பிரபாகரன், செ.நடேசன், சம்சுதீன் ஹீரா, தாண்டவக்கோன் ஆகியோர் எழுச்சிமிகு கவிதைகள் வாசித்து பார்வையாளர்களை ஈர்த்தனர்.இதைத் தொடர்ந்து எங்கே போகிறது இந்தியா என்ற தலைப்பில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் கருத்துரை ஆற்றினார். எழுத்தும், உணவும் என் உரிமை என்ற தலைப்பில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய மாவட்டத் துணைத் தலைவர் பி.ஆர்.கணேசன் நிறைவாக நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.