பூதலூர்,நவ.21-

தஞ்சை:-தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி

திருச்சி பொன்மலை ரயில்வே குட்செட்டில் ஊழியர்களாக வேலைப் பார்ப்பவர்கள் சிவராமன் (வயது–34), செந்தில்வேல் (33). இவர்கள் தங்களது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணத்தங்குடி கீழையூரில் உள்ள அவரது வீட்டுக்கு வெள்ளியன்று மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் இரவு பொன் மலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் திருச்சி-தஞ்சை சாலை யில் உள்ள வலம்பகுடி பிரிவு சாலை யில் சென்றபோது, ரோட்டில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலி யான 2 பேர் உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செங்கிபட்டி இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, சப்-இன்°பெக்டர்கள் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தடுப்பு சுவரில் மோதி பலியான 2 பேர் உடலை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருகார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் காரில் வந்த 2 பேர்
படுகாயம் அடைந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என் பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை மீட்டு தனியார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை-திருச்சி சாலையில் மலையேறிபட்டி, வலம்பகுடி, புதுக்குடி, திருமலை சமுத்திரம் ஆகிய இடங்களில் சாலையோர மின்விளக்கு வசதி இல்லாததால் இருட்டில் வாகனங்கள் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அங்கு மின்விளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: