சேர்ந்து சிந்திப்போம்!

சேர்ந்து சிந்திப்போம்!

கட்சியின் அமைப்புச்சட்டம் மற்றும் விதிகளின் படி “தேசம் முழுமைக்கும் கட்சியின் உச்சபட்ச ஸ்தாபன அமைப்பு அகில இந்திய கட்சி காங்கிரஸாக(மாநாடு) இருக்கும்” என்று உள்ளது. “கட்சித் திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தை திருத்துவது அல்லது மாற்றுவது” மற்றும் “நிகழ்கால சூழலில் கட்சியின் (அரசியல்) நிலையை தீர்மானிப்பது” ஆகியவை கட்சி காங்கிரசின் பணிகள் மற்றும் அதிகாரங்களுக்கு உட்பட்டது. இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வாரத்தில் கொல்கத்தாவில் கட்சியின் பிளீனம் (உயர்வடிவ கூட்டம்) நடக்க உள்ளது. இன்றைய தேசிய மற்றும் உலகச் சூழலை கணக்கில் கொண்டு எத்தகைய திட்டங்களை மற்றும் அரசியல் நிலைபாடை உருவாக்குவது என்பதை பிளீனம் விவாதிக்க உள்ளது. கட்சியின் முடிவுகளை உருவாக்கும் முறையில் உச்சபட்ச ஸ்தாபன அமைப்பான அகில இந்திய கட்சி மாநாடுக்கும் பிளீனத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?-

அசித் சென்குப்தா/ஹூக்ளி/மேற்கு வங்கம்

பிளீனம் என்பது ஒரு விரிவடைந்த கூட்டம். ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விசேட பிரச்சனையை விவாதிக்க மத்தியக் குழுவோ அல்லது அகில இந்திய கட்சி மாநாடோ பிளீனத்தை கூட்டலாம். கட்சி அமைப்புச் சட்டம் இதற்கு அனுமதி அளிக்கிறது. கட்சி அமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவில் 13ஆவது உட்பிரிவு கூறுகிறது:- “தேவை என்று கருதும் பொழுது மத்தியக்குழு தனது விரிவடைந்த கூட்டத்தையோ அல்லது பிளீனத்தையோ அல்லது மாநாடையோ கூட்டலாம். எவ்வளவு பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்பதையும் அவர்களை தேர்வு செய்யும் முறை குறித்தும் மத்தியக்குழு தீர்மானிக்கும்.”நீங்கள் குறிப்பிட்டது போல “இன்றைய தேசிய மற்றும் உலகச் சூழலை கணக்கில் கொண்டு எத்தகைய திட்டங்களை மற்றும் அரசியல் நிலைபாடை உருவாக்குவது” என்பதை குறித்து விவாதிக்க பிளீனம் கூட்டப்படவில்லை. இப்பணி ஏற்கெனவே அகில இந்திய கட்சி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. ஸ்தாபன பிரச்சனைகளை விவாதிப்பதற்காக பிளீனத்தை கூட்டுவது என்று ஏப்ரல் 2015ல் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய மாநாடு தீர்மானித்தது. இதுவரை பின்பற்றப்பட்ட அரசியல் உத்தி குறித்து ஆழமாக பரிசீலனை செய்வதிலும் இனி பின்பற்றப்படவேண்டிய புதிய அரசியல் உத்தியை உருவாக்கியதிலும் அகில இந்திய மாநாடு தனது கவனம் முழுவதையும் செலுத்தியது. இந்த புதிய அரசியல் உத்தியை அமல்படுத்துவதற்கு ஏதுவாக கட்சி ஸ்தாபனத்தை தகவமைப்பது மற்றும் செழுமைப்படுத்துவது குறித்து விவாதிக்க தனியாக விசேட கூட்டம் ஒன்று நடத்த வேண்டும் என உணரப்பட்டது.

இக்கூட்டத்திற்கான தயாரிப்பு பணிகளுக்கு போதிய கால அவகாசம் தேவைப்பட்டது. எனவேதான் டிசம்பர் இறுதி வாரத்தில் கொல்கத்தாவில் கட்சியின் பிளீனம் (உயர்வடிவ கூட்டம்) நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கட்சியின் வரலாற்றில் பிளீனம் அல்லது விரிவடைந்த மத்தியக்குழு கூட்டம் என்பது பல சமயங்களில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இரு பிளீனங்கள் நடந்துள்ளன. 1968ஆம் ஆண்டு பர்தமானில் (பர்துவான்) தத்துவார்த்தப் பிரச்சனைகளை விவாதிக்க பிளீனம் நடத்தப்பட்டது. 1978ஆம் ஆண்டு சால்க்கியாவில் ஸ்தாபனப் பிரச்சனைகள் விவாதிக்க பிளீனம் நடத்தப்பட்டது. கட்சித்திட்டம் செழுமைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது 2000ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இதற்காக விசேட மாநாடு நடத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய அரசியல் சூழ்நிலையை விவாதிக்கவும் அதன் அடிப்படையில் அரசியல் நிலைபாடை உருவாக்கவும் விஜயவாடாவில் விரிவடைந்த மத்தியக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இத்தகைய விசேட கூட்டங்களுக்கு முன்பாக விவாதத்திற்கு தேவையான ஆவணங்களை மத்தியக்குழு தயாரிக்கிறது. இந்த ஆவணங்கள் கட்சியினுள் பல்வேறு மட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: