கோவை, நவ. 21-

கோவை:-பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் அம்மா பேட்டையை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (45), ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து கோவையிலுள்ள கேம்சிஎச் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இவரிடம்மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இதையடுத்து ஜாகிர் உசேனுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளார். எனவே இத்தகவலை அம்மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேம்சிஎச் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களுக்கு டாமிபுளூ மாத்திரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply