காஞ்சிபுரம், நவ. 21-

கைத்தறி தொழிலை பாதுகாக்க ஜன. 20-30 வரை கோரிக்கை வாரம்:-தென்னிந்திய மாநாடு அறைகூவல்

கைத்தறி தொழிலை பாதுகாக்கவும் நெசவாளர்கள் வாழ்வு மேம்படவும் 2016 ஜனவரி 20 முதல் 30 வரை கோரிக்கை வாரம் கடைப்பிடிக்க தென்னிந்திய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. தென்னிந்திய கைத்தறி நெசவாளர்களின் சிறப்பு மாநாடு வெள்ளியன்று (நவ. 20) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

போனஸ் – பஞ்சப்படி – பி.எப்., இ.எஸ்.ஐ., ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம், ஆண்டுக்கு 20 நாட்கள் மழைக்கால நிவாரணம் உள்ளிட்ட சமூக நல திட்டங்கள் அடங்கிய 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2016 – ஜனவரி – 20 முதல் 30 வரை தென் மாநிலங்கள் முழுவதும் கைத்தறி மையங்களில் கோரிக்கை தினம் கடைப்பிடிக்கவும் ஜனவரி – 25 அன்று ஆந்திர மாநிலம் தர்மாவரத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பங்கேற்கும் நெசவாளர் சிறப்பு மாநாடு நடத்துவது என்றும் இந்த சிறப்பு மாநாடு முடிவு செய்தது.

மாநாட்டில் 16 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.சிங்காரவேலு, இ.முத்துக்குமார், எஸ்.என்.துரைராஜ், பழனியம்மாள், கேரளாவைச் சேர்ந்த அரக்கன்பாலன், ஆடிப்பா சதானந்தன், எஸ்.பிரகாசம், கே.சீதரன், ஆந்திராவைச் சேர்ந்த பில்லாலமாறி – பாலகிருஷ்ணா, போலா – ராம ஆஞ்சநேயலு, சாஜா – நாகேஸ்வரராவ், தெலுங்கானாவைச் சேர்ந்த சி.எச்.சீத்தாரமையலு, கே.ரமேஷ், ஏ.பிக்சயபதி, ஜி.முரளி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் என 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.