துபாய், நவ. 21-

கிரிக்கெட் பட்லர் சாதனை

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் விளையாடிய 4ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் பகல்-இரவாக நடந்தது. இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அதிரடியாக நாலபுறமும் பந்தை சிதறடித்து 46 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரியும் 8 சிக்கரையும் அடித்தார். 116 ரன்களை குவித்தஅவர் இறுதி வரை அவுட்டாக வில்லை. இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் அடித்த முதல் இங்கி லாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். உலக அளவில் 8–வதுவீரர் ஆவார். 31 பந்தில் சதம் அடித்ததென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.50 ஓவரில் 5 விக்கெட்இழப்புக்கு 355 ரன் குவித்தது. ஜேகன்ராய் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஜோரூட் 71 ரன் எடுத்தார். கடைசி 11 ஓவரில் இங்கிலாந் தின் ரன் ஜெட்வேகத்தில் உயர்ந்தது. அதனால் 145 ரன்களை கிடைத்தது.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணி 40.4 ஒவரில் 271 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டி கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் வருகிற 26ஆம் தேதி துபாயில் நடக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: