லண்டன், நவ. 21-

ஏடிபி உலக டென்னிஸ் இன்று இறுதிப்போட்டி

‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் உலக ஏடிபி டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீரர் ஆன்டிமுர்ரேவை (இங்கிலாந்து) 4ஆம் நிலை வீரரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சகநாட்டைச் சேர்ந்த டேவிட் பெரரை தோற்கடித்தார். முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- ரபேல் நடால் விளையாடுகிறார்கள். இரண்டாவது அரையிறுதியில் ரோஜர் பெடரரை– வாவ்ரிங்கா சந்திக்கிறார். இதில் வெற்றி பெறும் இருவர் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.