தோழர் ஆர்.நாராயணன்

திண்டுக்கல், நவ.21-

திண்டுக்கல்லைச் சேர்ந்த முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் எல்ஐசி ஆர். நாராயணன் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 94.

ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்

தோழர் நாராயணன் மறைவுதமிழக தொழிற்சங்க இயக்கத்திற்கும் திண்டுக்கல் தொழிற்சங்கஇயக்கத்திற்கும் மிகப் பெரும்இழப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர்ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்தெரிவித்துள்ளார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் நாராயணன், நடுத்தர வர்க்க ஊழியரின் உரிமைகளுக்காக மட்டுமின்றி ஏழை, எளிய அடித்தட்டுதொழிலாளர் வர்க்க நலன்களுக்காக வாழ்நாள் முழுவதும்பாடுபட்டவர் என ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பை (ஜேசிடியு) உருவாக்கி தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுத்த முன்னோடி தோழர்நாராயணன் என்றும் குறிப்பிட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தோழர்கள் மற்றும் திண்டுக்கல் தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் அஞ்சலி

அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், கே.பாலபாரதி எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, வி.குமரவேல், எம்.ஆர்.முத்துச்சாமி, வ.கல்யாணசுந்தரம், கே.ஆர்.கணேசன். ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மணி, நகரச் செயலாளர் பி.ஆசாத் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தென் மண்டலத்தலைவர்கள் ராஜப்பா, என்.எம்.சுந்தரம்,இ.எம்.ஜோசப், எம்.எஸ்.அருள்தாஸ், தென்மண்டலப் பொதுச்செயலாளர் சுவாமிநாதன், மதுரை கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம், பொதுச் செயலாளர் ரமேஷ்கண்ணன், துணைத்தலைவர்கள் வாஞ்சிநாதன்,சுரேஷ் மற்றும் பொதுஇன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் ராஜேந்திரன்,கௌதமன், பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிஐடியு மாவட்டத்தலைவர் கே.முத்துராஜ் மற்றும் கே.பிரபாகரன் (கட்டுமானம்), ஆர்.பால்ராஜ் (அரசு போக்குவரத்து), முருகேசன் (ஆட்டோ), தவக்குமார் (தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம்), ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் சோமசுந்தரபோஸ், கோபால்,துரைப்பாண்டி, இலக்கிய கள நிர்வாகிகள் ராமமூர்த்தி,மணிவண்ணன், இரா.சு.மணி, கண்ணன், ராமசாமி,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் வைத்தியலிங்கபூபதி, ஜான்போர்ஜியா மற்றும்திண்டுக்கல் எல்ஐசி கிளை சார்பில் பாரத், வனிதா, வாலிபர் சங்கம் சார்பில் சரத்குமார், விஷ்ணு, சிபிஎம் நகர்க்குழு சார்பில் தேவி, அரபுமுகமது உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.