சென்னை, நவ. 20-

 Fuel Conferenceகணினி தொழில் நுட்பத்தில் இந்திய மொழிகள் குறித்த மாநாடு வெள்ளியன்று (நவ.20) சென்னையில் தொடங்கியது. இது பற்றிய விவரம் வருமாறு:- தன்மொழியாக்க திட்டங்களை தரப்படுத்துதல், அதிலிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைகள், நுணுக்கங்கள் உள்ளிட்டவைகளை விவாதிப்பதற்கான ‘பியூல் கில்ட் மாநாடு (எப்யுஇஎல் ஜிஐஎல்டி கான்பரன்ஸ்) சென்னை அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள டாக் அரங்கில் தொடங்கியது.

இந்தியாவின் தலைசிறந்த அரசு தொழில்நுட்ப நிறுவனமான சி-டாக் (சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங்) நிறுவனம், மொசில்லா நிறுவனம், ரெட்ஹாட் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை, தமிழ் இணையக் கல்விக் கழகமும், தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையும் ஒருங்கிணைத்தது.

இந்த மாநாட்டில், இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 60 பேர் பங்கேற்றுள்ளனர். கணினி தொழில் நுட்பத்தில் இந்திய மொழிகள் தொடர்பாக பல ஆய்வறிக்கைகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நவ. 21, 22 தேதிகளில் மொசில்லா நிறுவனத்தின் சார்பில் ‘மென்பொருள் தொழில்நுட்ப பட்டறை’ நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: