கனமழையில் பாதிக்கப்பட்ட வடசென்னை மக்கள்

கனமழையில் பாதிக்கப்பட்ட வடசென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் புதனன்று (நவ18) வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம், சுனாமி குடியிருப்பு, சடையங்குப்பம், மாதவரம் செங்குன்றத்திற்குட்பட்ட விநாயகபுரம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்ட அவர்,பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வெள்ளநீரை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு எந்திரங்கள் முடுக்கி விடப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். உடன் வடசென்னை மாவட்டசெயலாளர் எல்.சுந்தரராஜன், செ.சுந்தரராஜன், ஆர்.ஜெயராமன், வீ.ஆனந்தன், மா.தா.பால்ராஜ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply