அருப்புக்கோட்டை, நவ. 19-

 அருப்புக்கோட்டையில் 10 பவுன் நகை கொள்ளை அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோடு, எம்.எஸ்.நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் ( 40). விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிகிறார். இருவரும் வெளியூர் சென்று விட்டு, வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளன. பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளும், மூன்று கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக் கப்பட்டிருந்தன. இது குறித்து  அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave A Reply

%d bloggers like this: