கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் – முதல்வர் ஜெயலலிதா.
ச.சா – வெள்ளத்துல கூட தேர்தல் பிரச்சாரம் பண்ணிருக்கீங்களே, அதச் சொல்றாங்களோ..??
* * *
மக்களை எப்போதும் வாய்ஜாலம் மூலம் ஏமாற்ற முடியாது – காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.
ச.சா – அது உங்களுக்கும் பொருந்துமே..?
* * *
பாகி°தான் சென்று மோடிக்கு எதிராகப் பேசிய காங்கிரஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு.
ச.சா – மோடிதான வெளிநாட்டுல போய் எதிர்க்கட்சிகளப் பத்தி பேசி வழிகாட்டுறாரு..??
* * *
பெண்கள் முழு மனதோடு வாக்களித்தால், 2016ல் பாமக வெற்றி பெறும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.
ச.சா – வாய்ப்பில்லைனு சொல்ல வர்றாரோ..??
* * *

Leave a Reply

You must be logged in to post a comment.