சென்னை,நவ.18-

சத்தியவாணிமுத்து நகர மக்கள் மீது  அ.தி.மு.க. ரவுடிகள் தாக்குதல்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 1 வது வட்டம் சத்தியவாணிமுத்து நகர் கடந்த பல நாட்களாக பெய்த கனமழையால் தண்ணீரில் மிதக்கிறது. மூன்று நாட்களாக மின்சாரம் கிடையாது. அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் புதனன்று காலை 7 மணிமுதல் மறியலில் ஈடுபட்டனர். எந்த அதிகாரிகளும் வரவில்லை. அதிகாரிகளை மக்கள் எதிர்த்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிகுழு உறுப்பினர் பார்த்தசாரதி. வி.சி.க.பகுதி செயலாளர் அன்புசெழியன் எப்படி இங்கு வரலாம் என தோழர் பார்த்தசாரதியை அதிமுக ரவுடிகள் அடிக்க முயற்சித்தனர். மக்கள் அவரை பாதுகாத்தனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பராமரிப்பு பணியை மூன்று நாட்களாக செய்யாமல் இருந்தது மட்டுமின்றி போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். காவல் துறை வேடிக்கை பார்க்கிறது.

பாதிக்கப்பட்ட சத்தியவாணி முத்துநகர் மக்களுக்கு அரசு உடனடியாக தண்ணீரை வெளியேற்றவும், மின்சாரம் வழங்கிட வேண்டும்.அ.தி.மு.க. ரவுடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருவொற்றியூர் பகுதி செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பத்மாநாபன், தமிழ்செல்வன், வெங்கட்டையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: