காஞ்சியில் இன்று தென்னிந்திய கைத்தறி நெசவாளர் கோரிக்கை சிறப்பு மாநாடு
 • இந்தியாவில் கைத்தறி தொழிலில் அரசு புள்ளி விவரங்களின்படி 43 இலட்சம் பேர் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • நாட்டின் ஜவுளி உற்பத்தியில் 11 சதவீதமும், ஜவுளி ஏற்றுமதி வருவாயில் 11 சதவீதம் துணிகள் பங்கு வகிக்கின்றன. இதில் கைத்தறியின் பங்களிப்பு பிரதானமாக உள்ளது.
 • இந்தியாவில் நெசவாளர்களின் வாழ்க் கை மிகவும் வறுமை நிலையிலேயே அமைந்துள்ளது. அவர்கள் இன்னமும் கௌரவமானவாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
 • சொந்த வீடு இல்லாதது, குறைந்த வருமானம் – நிச்சயமற்ற வேலை வாய்ப்பு உறுதியற்ற வருவாய் – ஏழ்மையின் அடையாளமாய் நெசவாளர் வாழ்க்கை அமைந்துள்ளன.
 • உறுதியற்ற வேலையின்மை – கடன் சுமை காரணமாக – நெசவுத் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு செல்வதும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
 • வறுமையின் காரணமாக ஆந்திராவில் 37 நெசவாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது சமீபத்திய தகவல். இதுவே நெசவாளர் வாழ்வின் அடையாளமாய் மாறுவதை அரசு தடுக்க முன் வரவேண்டும்.
 • பட்டு சேலை, பெட்ஷீட் – வேட்டி – லுங்கி – டவல் – திரைச்சீலை -மேட் – தரைவிரிப்பு உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற துணிகளை உற்பத்தி செய்யும் நுண்திறன் வாய்ந்த நெசவாளர்கள் போற்றப்படாததும் அவர்களது வாழ்க்கை வறுமையில் வாடுவதும், ஆட்சியாளர்களின் கொள்கை நெசவாளர்களையும் – நெசவுத் தொழிலையும் பாதுகாக்க உதவவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
 • தேசிய அளவில் நெசவாளர் தினம் என ஆகஸ்ட் 7 அறிவிக்கப்பட்டும் பலனில்லை.
 • நாடு முழுவதும் நெசவாளர்களின் உழைப்பும், பிரச்சனைகளும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் அவர்களுக்கான ஊதியம் – சமூக நலத்திட்டங்கள் ஒரே மாதிரியாக இல்லை.
 • தமிழகத்தில் உள்ள ஓய்வூதியம் – இலவச மின்சாரம் – நலவாரிய திட்டங்கள் போன்றவை கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வேறு மாநிலங்களில் இல்லை.
 • ஆந்திராவில் உள்ள மழைக்கால நிவாரண திட்டங்கள் வேறு மாநிலங்களில் இல்லை.
 • கேரளாவில் அமலில் உள்ள பிஎப், இஎஸ்ஐ பஞ்சப்படி திட்டங்கள் வேறு மாநிலங்களில் இல்லை.
 • அரசின் நெசவாளர் மற்றும் ஜவுளி மேம்பாடு திட்டங்கள் பெருவாரியான தனியார் நெசவாளர்களுக்கு கிடைப்பதில்லை.
 • கைத்தறி தொழிலை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட 22 ரக ஒதுக்கீடு திட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு 11 ரக ஒதுக்கீடாக மாற்றப்பட்டது. தற்போது 11 ரகங்களும் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் ஆந்திரா – தமிழகம் உள்ளிட்ட பிரதான கைத்தறி உற்பத்தி பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
 • ரக ஒதுக்கீடு சட்ட அமலாக்க துறைகள் உரிய வகையில் செயல்படாத நிலை உருவாகியுள்ளது.
 • மத்திய அரசின் ஜவுளி மேம்பாடு திட்டங்கள் மற்றும் நெசவாளர் திட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறை சாத்தியமற்ற நிபந்தனைகள் – பெரும் முறைகேடுகள் மற்றும் நெசவாளர்களை சென்றடையாத நிர்வாக நடைமுறைகளாக உள்ளன.
 • இத்தகைய பின்னணியில் நெசவுத் தொழிலையும் – நெசவாளர் வாழ்வு மேம்படவும் சிஐடியு சார்பில் காஞ்சிபுரத்தில் நவம்பர் 20 வெள்ளியன்று நடைபெறவுள்ள தென்னிந்திய கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கை சிறப்பு மாநாடு கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசிற்கு முன் வைக்கிறது :-
 • ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய நெசவாளர் தினமாக அரசு அறிவித்துள்ளதை வெறும் விளம்பர தினமாக இல்லாமல் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவாளர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும்.
 • உள்நாட்டு சந்தையை பலப்படுத்துவதும், எளிய மக்கள் மத்திய தரவர்க்கம் உள்ளிட்ட அனைவரும் கைத்தறி துணிகளை பயன்படுத்தவும் – அதற்குரிய திட்டங்களை வகுப்பதுடன் – விற்பனை ஊக்குவிப்பு மானியங்கள் நுகர்வோருக்கு முறைகேடின்றி கிடைத்திட அரசு உறுதி செய்திட வேண்டும்.
 • ரக ஓதுக்கீடு சட்டம் விதியை மீறுவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைத்தறிமையங்களிலேயே ரக ஒதுக்கீடு சட்டம் அமலாக்கும் அலுவலகம் திறக்கப்பட வேண்டும்.
 • கூட்டுறவு சங்கங்களுக்கான கடன்கள் 2013-ல் அறிவித்தபடி நிபந்தனையின்றி அனைத்துகடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்.
 • துணி விலை தள்ளுபடி மானியங்கள் 20சதவீதம் உச்சவரம்பின்றி முழுமையாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கிட வேண்டும்.
 • நூல் மற்றும் கச்சா பட்டு நெசவாளர்களுக்கு அரசு மானியத்துடன் வழங்கிடும் வகையில் கைத்தறி கச்சா பொருள் வங்கிகள் (குடோன்கள்) கைத்தறி மையங்களில் துவங்கிட வேண்டும்.
 • வருங்கால வைப்புநிதி – இ.எஸ்.ஐ. பணிக்கொடை – இலவச மின்சாரம் – ஆண்டுக்கு 20 நாட்கள் மழைக்கால நிவாரணம் – நெசவாளர் பசுமைவீடு திட்டங்கள் – போனஸ் – பஞ்சப்படி சட்டங்கள்நாடு முழுவதும் நெசவாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.
 • 60 வயது பூர்த்தி அடைந்த ஆண் நெச வாளர்கள், 50 வயது பூர்த்தி அடைந்த பெண் நெசவாளர்கள் அனைவருக்கும் ரூ.4,000/- ஓய்வூதியம் மத்திய அரசு தனியாக நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
 • மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்ட மான ராஷ்டி ரியஸ் வஸ்திய பீமா யோஜனா திட்டம் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
 • பிரதமர் நெசவாளர் கடன் அட்டை திட்டம்- கிளஸ்டர் திட்டங்கள் தகுதியுள்ள விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கவும், அதற்கான நிபந்தனைகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
 • கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் வங்கி கடனுக்கு வசூலிக்கப்படும் 13 சதவீத வட்டியை 4 சதவீத மாக குறைக்க வேண்டும்.
 • பெண் நெசவாளர்களுக்கு பிரசவ காலத் தில் பேறு கால உதவி நிதியாக ரூ.12,000/- வழங்கிட வேண்டும்.
 • அனைத்து அரசு திட்டங்களையும் பெறும் வகையில் நெசவாளர்களுக்கான தேசிய அளவி லான ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்கிடவேண்டும்.
 • அகில இந்திய அளவிலான கைத்தறி ஆலோசனை கமிட்டியில் நெசவாளர் அமைப்பு களின் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும்.
 • நெசவாளர் நலன் மற்றும் கைத்தறி தொழில் பாதுகாக்கும் நோக்குடன் உள்ளடக்கிய புதிய கைத்தறி நெசவுக் கொள் கையை மத்திய அரசு தனியாக உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
  மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் பாரம் பரியமிக்க கைத்தறி தொழிலையும், நெசவாளர் வாழ்வையும் மேம்படுத்த முடியும் என இந்திய நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மோடி அரசு ஒரு நாள் கைத்தறி விழாவை கடந்த ஆகஸ்ட் – 7-ல் சென்னையில் நடத்தியது ஒரு
விளம்பர செயல் தான்.ஆனால் நவம்பர் – 20-ல் காஞ்சியில் நடை பெறும் நெசவாளர் மாநாடு தன் வாழ்விற்கும், தொழிலுக்கும் நம்பிக்கையான மாற்றம் காண, இதைச் செய்யுங்கள் என அரசுக்கு அடையாளம் காட்டும் மாநாடாக அமைய இருக்கிறது.

இ.முத்துக்குமார்

தென்னிந்திய கைத்தறி நெசவாளர் சம்மேளானம் (சிஐடியு)

Leave a Reply

You must be logged in to post a comment.