இராமேஸ்வரம்,நவ.19-

image3344இராமேஸ்வரம் மற்றும் மண்பம் மீனவர்கள் 14 பேருடன் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுவிட்டனர். இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட படகுகளில் நான்காயிரத்திற்கும்  மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென் றனர்.

வியாழன் அதிகாலை  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்குவந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அறுத்தெறிந்துள்ளனர்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பெனிட்டோ என்பவரது படகில் இருந்த ஆறு மீனவர்கள், மண்ட பத்தைச் சேர்ந்த சேக்அப்துல்காதர், பூபதி ஆகியோரின் இரண்டு படகுகள், எட்டு மீனவர்கள் என மொத்தம் மூன்று படகுகள், 14 மீனவர்களை சிறைப் பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் மீது  எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஊர்க் காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி அவர்களை, டிச. 3-ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததால் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து படகுகள் பறி முதல் செய்யப்பட்டு காங்கேசம் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

ஏற்கனவே 46 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மீனவ சங்கத் தலைவர் சகாயம், பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் ஆகியோர் கூறியதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகு களை மீட்க  மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: