புதுதில்லி:-நிதிஷ்குமார்

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் நவ.20ந் தேதி பதவியேற்கிறார். பாட்னாவில் நடைபெறவுள்ள விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார். திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்காருக்கும் விழாவில் பங்கேற்க நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
விழாவில் பங்கேற்குமாறு நிதிஷ்குமார் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் இதனை ஏற்று பங்கேற்ப இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் து.ராஜா தெரிவித்தார். நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.