டிச.1-6 மதவெறிக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் பிரச்சாரம் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல சிபிஎம் அறைகூவல்

left parties

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் தில்லியில் நவம்பர் 13 – 16 தேதிகளில் நடை பெற்றது. கூட்டத்தில் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:-

இடதுசாரிக் கட்சிகளின் அறைகூவல்மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி, இந்தியக் கம்யூனி°ட் கட்சி, இந்தியக் கம்யூனி°ட் கட்சி (மா-லெ)-லிபரேசன், அகிலஇந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோச லி°ட் கட்சி மற்றும் எ°யுசிஐ (சி) ஆகிய ஆறு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஆர்
எ°எ° கட்டவிழ்த்து விட்டுள்ள மதவெறி வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராகவும், அதற்கு உறுதுணையாக உள்ள பாஜக தலைமையிலான மத்திய அர சைக் கண்டித்தும் வரும் டிசம்பர் 1 முதல்6 தேதிகளில் நாடு தழுவிய அளவில் பிரச்  சாரம் மேற்கொள்ளுமாறு அறைகூவல்  விடுத்துள்ளன.
இந்நாட்களில் நாடு முழுவதும் எதிர்ப்புஇயக்கங்களை நடத்திடுமாறு கட்சிக் கிளைகளை மத்தியக் குழு கேட்டுக் கொள்கிறது.

மியான்மர்

மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் நான்கில் மூன்று பங்குக்கும் மேல் இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைத்திட்ட ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (சூடுனு-சூயவiடியேடடுநயபரந கடிச னுநஅடிஉசயஉல) கட்சியை மத்தியக் குழு பாராட்டுகிறது, வாழ்த்துகிறது. மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு அழுத்தம் கொடுத்தது, உண்மையில் மியான்மர் மக்களுக்கும் நாட்டுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். இது இப்பிராந்தியத்தில்  சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நேபாளம்

நேபாள மக்கள், மதச்சார்பற்ற குடியரசு அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியமைக்காக மத்தியக்குழு பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.  நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த கே.பி. ஒலி பிரதம ராகவும், அதே கட்சியைச் சேர்ந்த வித்யா
தேவி பண்டாரி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவுடன் சில மாதேசி குழுக்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக,  சில பகுதிகளில் வன்முறை கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  நேபாளஅரசின் மதச்சார்பற்ற குடியரசு அரசமைப் புச்சட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதமத்திய பாஜக அரசாங்கம், நேபாளத்தின் எல்லைப் பகுதிகள் பலவற்றில் வேண்டும் என்றே சாலைகளை அடைத்து வைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேபாளத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வுகள் கூர்மையாக அதிகரித்து வருகின்றன. இந்திய அரசு நேபாளத்திற்கிடையிலான போக்குவரத்தை மீண்டும் உடனடியாக சரிசெய்து, அத்தியாவசியப் பொருள்கள் நேபாளத்திற்குச் செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்தியக்குழு கோருகிறது.

வங்க தேசம்

வங்க தேசத்தில் மத அடிப்படை வாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவ தற்கு மத்தியக்குழு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக முரண்பட்ட அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் இவ்வாறு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் வேலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும், மறுபக்கத்தில் ஆட்சியில்  இருக்கும் அவாமி லீக் கட்சி அரசாங்கம் இது எதிர்க்கட்சியான பிஎன்பி (க்ஷசூஞ) மற்றும் அதனுடன் இணைந்துள்ள முஸ்லீம் அடிப்படை வாதிகள்தான் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்காக, இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டி வருகிறது.

இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகள், இந்தியாவில் உள்ள மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்தியக்குழு ஸ்தாபனம் தொடர்பான வரைவு அறிக்கையைஇறுதிப்படுத்தியுள்ளது. அதனை அனைத்து மாநிலக் குழுக்களுக்கும் அனுப்பிட இருக்கிறது. மத்தியக்குழு டிசம்பர் 26 அன்று கூடி, கொல்கத்தாவில் டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் பிளீன மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை இறுதிப்படுத்தும். பிளீனம் சிறப்பு மாநாட்டை மாபெரும் அளவில் வெற்றி பெற வைக்கக்கூடிய விதத்தில் மேற்கு வங்கத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபயணங்களும் வெகுஜன இயக்கங்கள் பலவும் நடைபெறு வதற்கான தயாரிப்பு வேலைகள் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பீகார் தேர்தல்கள்

பீகார் மக்கள், சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு படு தோல்வியை அளித்துள்ளனர். நரேந்திர மோடி – அமித் ஷா மேற்கொண்ட பிரிவினைப் பிரச்சாரம், மக்களின்  உணவு பழக்கங்கள், சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு மதவெறிப் பிரச்சாரத் தினை முழுமையாக நிராகரித்துள்ளார்கள்.பீகார் தேர்தல் முடிவு, நாடு முழுவதும் வலதுசாரி மதவெறி சக்திகளுக்கு எதிரா கப் போராடுவதை வலுப்படுத்தும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-லிபரேசன்) உட்பட உருவாக்கப்பட்ட ஐக்கிய இடதுசாரி அணியின் பிரச்சாரமும் பீகார் மக்களால்நன்கு வரவேற்கப்பட்டன. இந்தியக் கம்யூனி°ட் கட்சி (மா-லெ) மூன்று இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.

கேரள பஞ்சாயத்துத் தேர்தல்கள்

கேரளாவில் நடைபெற்றுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள முடிவுகள், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளையும், ஊழலையும் நிராகரிக்கக் கூடிய முறையில் அமைந்துள்ளன.  பாஜகவின் மதவெறி அரசியலுக்கும், சாதிய அமைப்புகளின் தலைவர்களை அவர்கள் உயர்த்திப் பிடித்ததற்கும் மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.இடது ஜனநாயக முன்னணி மீது  நம்பிக்கை வைத்திருப்பதற்காக கேரளமக்களுக்கு மத்தியக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இடது ஜனநாயக முன்னணிஒன்றுபட்டு நின்று பிரச்சாரம் மேற்கொண்டது மற்றும் நேரடியாக மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.

பஞ்சாப் நிகழ்ச்சிப் போக்குகள்

பஞ்சாப் மாநிலத்தின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் மோசமான முறையில் சீர்குலைக்கும் விதத்திலும் பஞ்சாப்பில் நடைபெற்று வரும் தீய அரசியல் நிகழ்ச்சிப்  போக்குகள் குறித்து, மத்தியக் குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது.  பாதல் அரசாங்கம் குருகிராந்த் சாகிப்பினை இழிவு படுத்தியதற்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய தவறியமை மற்றும் வெகுஜன கிளர்ச்சிகளைக் கையாள்வதில் முட்டாள் தனமாக நடந்துகொண்டமையால் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரு சீக்கிய இளைஞர்கள் மரணம் அடைந்தது ஆகியவை சீக்கிய அடிப்படைவாதிகளும், காலிஸ்தான் ஆதரவு சக்திகளும் ஊக்கமடைய வழிவகுத்துள்ளன.

பொருளாதார நிலைமை

பிரதமர் மோடி, நாட்டின் வளங் களையும், சந்தைகளையும் அந்நிய மூலதனம் கொள்ளையடித்துச் செல்வதற்கு வழியேற்படுத்தும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்.  இம்முடிவுகள் அனைத்துமே நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு சில நாட் களுக்கு முன் எடுக்கப்பட்டிருக்கின்றன.  எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், இவ்வாறு முடிவுகள் மேற்கொண்டிருப்பதற்கு, அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெறாமையாகும். இச்செயல் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையே முழுமையாக எள்ளி நகையாடுவதாகும். பிரதமர் மோடி இத்தகைய அறிவிப்புகளை தான் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குமுன் அந்நிய மூலதனத்தை குஷிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொண்டுவருகிறார்.

மக்கள் மீது மேலும் சுமை

புதிய பொருளாதார சுமைகளால் நாட்டிலுள்ள பெரும்பான்மையான  மக்கள் புலம்புவது தொடரக்கூடிய அதே சமயத்தில், அந்நிய மூலதனம் நம்மைக் கொள்ளையடித்துச் செல்வதற்கு உரிமங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டுமக்களின் புரதச்சத்திற்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் பருப்புகளின் விலைகள், சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவிற்கு,  கடுமையாக உயர்ந்துள்ளன. இதர அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கின்றன.வேளாண்துறை நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் உற்பத்திச் செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய அளவிற்குக் கூட, குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவில்லை.  இது விவசாயிகள் தற்கொலை
செய்துகொள்வதை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

தொழில் உற்பத்தியைப் பொறுத்த வரை, சென்ற மாதம் 6.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், இந்த மாதம் 3.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கை காட்டுகிறது. இதன் விளைவாக, பிரதானமாக வேலை வாய்ப்பை உருவாக்கும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதமும் 6.9 சதவீதத்தி லிருந்து, 2.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இத்தகைய நிலைமைகளில் அந்நிய மூலதனத்திற்கு வெண்சாமரம் வீசுவது, எவ்விதத்திலும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்திடாது.

மக்களின் வாங்கும் சக்தி மிகவும் வீழ்ச்சி அடைந்திருப்பதால், உள்நாட்டுக் தேவை சுருங்கிவிட்டது.சாமானிய மக்களின் ரொட்டி, பருப்பு வகைகள் அவர்களுக்கு எட்டாப் பொருளாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக,பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும்மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டி ருக்கிறது. பல்வேறுவிதமான ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டிருக் கின்றன. “தூய்மைத் திட்டத்திற்காக’’ சேவை வரியும் விதிக்கப்படுகிறது.இந்தப் பின்னணியில் ஓரளவுக்கு கிராமமக்களுக்கு ஆறுதல் அளித்துவந்த மகா த்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட நிதியும் கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட் டிருக்கிறது.

அதிகரித்துவரும் மதவெறியும்,    அறிவுஜீவிகளின் எதிர்ப்பும்

நாடு முழுவதும், ஆர்எஸ்எஸ் – பாஜகபரிவாரம் மதவெறிப் பதற்ற நிலைமைகளை  அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பீகார் தேர்தலின் போது, இத்தகைய பதற்ற நிலைமை தீவிரப்படுத்தப்பட்டது. மதவெறி நடவடிக்கைகளுக்கு மத்திய பாஜக அரசாங்கமும், பல்வேறு பாஜக மாநில அரசாங்கங்களும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதாலும்,  பிரதமர் மோடி நடவடிக்கை எதுவும் எடுக்க மறுப்பதாலும்,  மதவெறி சக்திகள் ஊக்கம் பெற்று, பல் வேறு இடங்களில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையே அழித்து, மதச் சிறுபான்மையினர் மத்தியில் பரவலாக பாதுகாப்பின்மை உணர்வை அதிகரித்திருக்கிறது.

அதிகரித்து வரும் சகிப்பின்மையும், நாடு முழுவதும் வெறுப்பு அரசியல்பரப்பப்பட்டு வருவதும், வன்முறைத் தாக்குதல்களுக்கு இடமளித்திருப்பதோடு, பகுத்தறிவாளர்களைக் கொலை செய்யக்கூடிய அளவிற்கும் இட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாக,
எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் தாங்கள் வாங்கிய சாகித்ய அகாடமி விருது களையும் மற்றும் பல்வேறுவிதமான விருதுகளையும்  அரசாங்கத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில் திருப்பி அளித்து வருகின்றனர்.

இதில் உலகப்புகழ்பெற்ற வரலாற்றுஅறிஞர்களும், திரைப்பட மற்றும் நாடகக் கலைஞர்களும், இணைந்து கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகளும் இதில் இடம் பெற்றுள்ளனர்.நம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட, நம் நாட்டுக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை உயர்த்திப்பிடித்திட உறுதி ஏற்றுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு இவர்களது நடவடிக்கைகள் வலுவினைத் தந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: