புதுதில்லி,நவ.18 –

‘கோல் இந்தியா’ நிறுவனத்தின், 10 சதவிகித பங்குகளை விற்கவும், 6 வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

narendra modiஅமெரிக்காவை சார்ந்த எல்.எல்.சி., சேர்கான் லிமிடெட், அகில் எலெக்ரிக் சப்-அஸ்சம்லி பிரைவேட் லிமிடெட், ஷெரப் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் செகியூயெண்ட் சைண்டிபிக் லிமிடெட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் கடந்த அக்டோபர் 30-ஆம்தேதி பரிந்துரை அளித்திருந்தது.

அதனை ஏற்று, இந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு, நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அனுமதியின் மூலம் 6 நிறுவனங்களும், சுமார் ரூ.ஆயிரத்து 810 கோடி அளவிற்கு முதலீடு செய்ய உள்ளன. ஒப்புதல் பெற்ற நிறுவனங்களில், மும்பையில் இயங்கி வரும் ஐ.ஐ.எஃப்.எல். நிறுவனமும் ஒன்றாகும்.

தனிடையே, அதேபோல ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் 10 சதவிகிதம் பங்குகளை விற்கவும் மத்திய அமைச்சரவை, புதனன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிலக்கரித் துறை அமைச்சர் பியூஸ்கோயல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 3 சதவிகித வட்டி மானியத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளிடையே ஐவிஎஸ்ஏ  நிதி உருவாக்கம் குறித்து முத்தரப்பு உடன்பாடு செய்து கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் அணுமின் திட்டங்களுக்கான அணு உலைகளை பெற ஏதுவாக அணுசக்தி சட்டத்தை திருத்துவது என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டத்தை திருத்தினால்தான் அணுமின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
அண்மையில் 13 துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்தது. தற்போது கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது.

Leave A Reply