Kandasamy K,வெள்ள பாதிப்புக்கு ஆட்சியாளர்களே காரணம்

தமிழக முதல்வர் சென்னையில் பருவ மழையால் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு 587 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது, 207 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது, 380 இடங்களில் வெளியேற்றப்பட வேண்டியுள்ளது. தாம்பரம் பகுதிக்கு இராணுவ உதவி கோரியுள்ளோம் என்று தெரிவித்தார். பருவகாலம் முழுவதும் பெய்யவேண்டிய மழை 3 நாட்களில் பெய்துவிட்டது. முன்னெச்சரிக்கை நடவ டிக்கை மழைநீர் தேங்கும் இடங்களில் கண்டறிவது தவிர்க்க இயலாது என்று தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2001 முதல் 2006 வரை முதல்வராக இருந்துள்ளார். இப்பொழுது 2011 முதல் இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு இதே சென்னையில் கடுமையான வெள்ளச்சேதம் ஏற்பட்டது. வெள்ள நிவாரணம் வழங்கப்பட்ட போது அந்தப் பணத்தைப் பெறுவதற்காக கூட்ட நெரிசலில் பலர் உயிர் இழந்ததும் அவருக்கு தெரியும். ஆனால் திடீரென்று சென்னையில் புதிதாக கடுமையான மழை பெய்தது போலவும் மழைநீர் தேங்கக் கூடிய இடங்களில் கண்டறிய முடியவில்லை என்று சொல்வதும் உண்மை நிலையை மூடி மறைப்பதாகும். கடந்த காலங்களில் எந்தெந்த இடங்களில் மழைநீர் தேங்கும், எந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்பதும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் எதுவுமே தெரியாது என்பது வேடிக்கையாக உள்ளது. காரணம் சிறு உத்தரவுவாங்க வேண்டும் என்றாலும் முதல்வரிடம் தான் வாங்கவேண்டிய நிலை தமிழகத்தில் உள்ளது. கடந்த காலங்களில் அணைகளில் தண்ணீர் திறந்து விடுவதென்றால் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளே திறந்து விட்டுவிடுவார்கள். ஆனால் இப்பொழுது தான் சிறிய அணைகளில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றாலும் முதல்வர்தான் உத்தரவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிகாரப்பரவல் வேண்டும் என்ற நிலையில் அதிகாரத்தை ஒருவரிடமே குவித்து வைத்துள்ள காரணத்தால், அதிகாரிகள் முதல்வர் உத்தரவுக்காக காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தான் வீராணம் ஏரி திறக்க முடியாமல் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் தானே புயலால்பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகாவது கடலூர் மாவட்டத்தில் மழைநீர் வடிவ தற்கு எந்தவித ஏற்பாடும் செய்யப்படவில்லை. வானிலை மையம் அக்டோபர் 16 அன்றே மழை தொடர்பான எச்சரிக்கை வெளியிட்டும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் பளிச்சென்று தெரிகிறது. தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை குழு செயல்பாடற்று உள்ளது. மாவட்டங்களிலும் இதே போல்தான் உள்ளது. பருவமழை வருவதற்கு முன்பே எந்தெந்த பகுதி பாதிக்கும் எந்தெந்த பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் செல்லும்? அந்தப் பகுதிகளில் என்ன பணிகளை செய்ய வேண்டும் என்று முன்பே கண்டறிந்து எந்தப் பணிகளையும் செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புக்கள் கமிஷனுக்கு மட்டுமே இருப்பதால், மக்கள் வெள்ள பாதிப்புகளால் ஏற்படும் சிரமங் களை கண்டறிந்து சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உள்ளாட்சி அமைப்புக்களில் நகரமைப்பு பிரிவு எங்குவீடுகள் கட்டுவதற்கு ஏற்ற இடமோ அங்குதான் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால் நீர்பிடிப்புப் பகுதியில் சொந்த இடமாக இருந்தாலும் அனுமதி கொடுக்கக் கூடாது. ஆனால் இந்த விதி மீறப்பட்டு தனியார் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போடப்பட்டதால், சென்னையில் வேளச்சேரி மற்றும் சத்தியபாமா கல்லூரி நீரில் மூழ்கியதற்கு கண்முன் உள்ள சான்று. இந்த நிலையில் தமிழக முதல்வர் எதிர்கட்சிகள் மழைவெள்ளத்தை அரசியலாக்குகிறது என்று சொல்வதற்கு எந்தவித நியாயமும் இல்லை. முதலில் தங்களுடைய அரசு நிர்வாகத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைமைக் கணக்காளர் இன்னொரு பேரிடர் நேர்ந்தால் அதை எதிர்கொள்ளும் தயார்நிலையில் தமிழகம் இல்லை என்று கூறியுள்ளார். 2012-ல் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு இதை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. இதேபோல் இந்தியாவில் 1999-ல் ஒடிசாவில் கடுமையான புயல் ஏற்பட்ட பொழுது 10,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால் அதற்கு பின்பு வந்த புயல்கள்அனைத்தையும் ஒடிசா அரசு முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து மக்கள் துயரத்தை பெருமளவு குறைத்துள்ளது. பேரிடர் மேலாண்மைக்கு முன் உதாரணமான மாநிலமாக ஒடிசா உள்ளது. தமிழகத்தில் சுனாமி, தானே மற்றும் பல்வேறு துயரங்கள் வந்தாலும், வறட்சிகள் வந்தாலும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபொழுதும் பேரிடர் மேலாண்மைக் குழுவை செயல்பட வைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றைக்கும் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புக்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏன் என்றால் சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களை இவர்கள் ஆட்சிக்காலத்தில் சரி செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இருவரும் மாறி மாறி ஒருவரை குறை சொல்கிறார்களே ஒழிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை இருவரும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் தமிழகத்தின் செயல் பாடுகளைப் பார்த்தால் தெரியும். தமிழகத்தில் இருக்கக்கூடிய குளங்கள், அணைகள் நீர்வழிப் பாதைகள் எதுவும் தூர்வாரப்படவில்லை. அப்படியே நிதி ஒதுக்கினாலும் பணிகள் செய்யப்படாமலே, செய்யப்பட்டதாக பணத்தை ஊழல் செய்து எடுத்துக் கொள்ளும் நிலைதான் உள்ளது. உதாரணமாக பழனி நகரத்தில் வையாபுரிக் குளத்தைத் தூர்வார 2008-ஆம் ஆண்டு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஒருநாள் மட்டும் சுமார் 10 லாரிகள் மட்டும் மண் எடுக்கப்பட்டு ரூ.47 லட்சம் பணம் எடுக்கப்பட்டுவிட்டது. தமிழகம்முழுவதும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளைக் கேட்டு வருகிறார். பழனி நகரத்திற்கும் வந்து சென்றார். வையாபுரிக்குளம் தூர்வாரப்படவில்லை என்று பொதுமக்கள் சொன்னார்கள். அதற்கு நாங்கள் ஆட்சிக்குவந்தால் தூர்வாரப்படும் என்றார். வையா புரிக்குளத்தைதூர் எடுக்காமலேயே தூர் வாரியதாக ரூ.47 லட்சம் பணம் எடுக்கப் பட்டதே தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான். ஆனால் மு.க.ஸ்டாலின் எதுவுமே தெரியாமல் இருப்பது திரைப்படத்தில் நடிப்பது போல் இருக்கிறது. இன்றைய தினம் வையாபுரிக்குளம் முழுவதும் அமலைச் செடிகாள், ஆகாயத் தாமரைகளால் நீர்நிலைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு வரக்கூடிய நீர்முழுவதும் ஆற்றுக்குச் சென்று கடலில்கலக்கக் கூடிய நிலைதான் ஏற்பட்டுள் ளது.

இதேபோல் தான் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நீர்நிலைப் பகுதி களில் உள்ள அமலைச்செடிகள், ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல மரம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு வரும்பொழுது ஊர்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டு கட்சிகளும் இதுபோன்ற பணிகளுக்கு ஒதுக்கக்கூடிய நிதியை சொந்த மாக்கிக் கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்களே ஒழிய நீர்நிலைகளில் பாது காக்கக் கூடிய பணிகளை செய்வதில்லை. மழைநீர் வடிகால்கள் வாய்க்கால்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழைநீர் செல்லமுடியாமல் மூடிகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வாய்க்கால்களுக்குள்ளேயே செல்லவில்லை. சாலைகளில் தேங்கி நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் பேப்பர்கள், கழிவுகளால் அடைக்கப்பட்டுள்ளது. எவ்வளவுதான் மழைத்தண்ணீர் வந்தாலும் மேற்கண்ட கழிவுகளை தள்ளிவிட்டு தண்ணீர் செல்லமுடியாது. அந்த அளவிற்கு நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது. இதைதடுப்பதற்கு உள்ளாட்சி மன்றங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிளாஸ்டிக் கழிவு களை தடுத்து நிறுத்துவதும், கேரிபேக் விற்பனை செய்வதையும் ஒழிப்பதன் மூலம் தான் சாத்தியமாகும். 2011-ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க.அரசு பொறுப்பேற்றவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் சம்பந்தமாக தொலைநோக்குப் பார்வையுடன் திட்டம்தயாரிக்கப்பட்டு இதில் சுற்றுச்சூழல்சம்பந்தமாக கேரிபேக் உபயோகப்படுத்து பவரை தடுத்து நிறுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லி சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ் ணன் அவர்கள் புத்தகமாகவே போட்டு தமிழக அரசிற்கு கொடுத்தார். ஆனால் அரசு அதைக் கண்டும் காணாமல் இருந்து விட்டது. மேலும் தனியார் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் முழுவதும் பெரும்பகுதி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். ஆற்றோரங்களில் மூன்று போகம் விளையக்கூடிய வயல்களுக்கு தரிசு நிலம்என்று பொய்யான சான்றிதழ் கொடுக்கப் பட்டு ரியல் எஸ்டேட் மற்றும் தனியார்நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டக்கூடியநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பெரும்ஊழல்கள் காரணமாக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிறகு மழைக்காலங்களில் சுற்றியுள்ள கட்டிடங்கள் முழுவதும் மழைநீர்  நின்று உயிர்சேதம் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் தொகைக்கேற்பவும் நகரின் விரிவாக்கத்திற்கேற்பவும் துப்புரவு பணியாளர்கள் நியமனம் என்பதில்லை. இதன் காரணமாக துப்புரவு பணி நடைபெறுவதில்லை. கழிவு நீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களை எடுக்கமுடியாத நிலை ஏற்பட் டுள்ளது. மத்திய அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு ஐக்கிய முன்னணி அரசின் முதல்ஐந்தாண்டு காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவுடன் இருந்த பொழுதுபிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக் கென்று மக்கள் தொகைக்கேற்பவும் மாவட்டத்தின் பரப்பளவிற்கேற்பவும் தமிழகத்தில் கடுமையாக வெள்ளம் பாதித்த கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,நாகப்பட்டினம் மற்றும் திண்டுக்கல், சிவ கங்கை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கும் சேர்த்து வருடம் சுமார் ரூ.120 கோடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. இந்த நிதியில் தலித்பகுதி மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்ய 30 சதவீதம் பயன்படுத்தப் பட்டது. மோடி அரசு வந்தவுடன் இந்த நிதிரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் ஆறு மாவட்டங்களுக்கு சேர்ந்து இரண்டு வருடத்தில் ரூ.300 கோடி நிதி உள்ளாட்சி மன்றங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிதி இருந்திருந்தால் உள்ளாட்சி பகுதிகளில் ஓரளவு சாலைவசதி, துப்புரவுப் பணிகளுக்கு, தள்ளுவண்டிகள், தள வாடச்சாமான்கள் வாங்கியிருக்க முடியும். தமிழகத்தை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தொலைநோக்குப் பார்வையுடன் எந்தப்பணிகளையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. வறட்சிக் காலத்தில் செய்ய வேண்டியப் பணி களையும் செய்வதில்லை. பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்கும் எந்தப்பணிகளையும் செய்வதில்லை. எனவே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தி.மு.க., அ.தி. மு.க., பி.ஜே.பி. கட்சிகள்தான் பொறுப் பேற்க வேண்டும்.

கட்டுரையாளர்:-25-வது வார்டு சி.பி.எம். நகர்மன்ற உறுப்பினர், பழனி.

Leave A Reply

%d bloggers like this: