சென்னை:-

வைகோவின் தாயார் மறைவு: சிபிஎம் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள்(95) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தும் போராட்டம் அனைத்துத் தரப்பு மக்களாலும் முன்னெடுக்கப்பட்ட போது கலிங்கப்பட்டியில் நடைபெற்ற மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர் வைகோவின் தாயார் மாரியம்மாள் அவர்கள். வைகோவின் பொதுவாழ்விற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அவரது தாயாரின் மறைவு வைகோ அவர்களுக்கு மிகுந்த பேரிழப்பாகும். வைகோவின் தாயார் மாரியம்மாள் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் துயருற்றுள்ள வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தது.

Leave A Reply

%d bloggers like this: