புதுதில்லி, நவ.6-

கருத்துரிமை மீதான பாஜகவின் பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருதுகளை திருப்பித்தந்த நாட்டின் பிரபலமான அறிவாளிகள் குறித்து பாஜக தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள ‘உண்மையை அறியுங்கள்’ என்ற நூலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. ஆழமான முறையில் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

விருதுகளை திருப்பித் தந்த அறிவாளிகள் மீதான அவதூறு பாஜகவின் அறிவு வறட்சிவெள்ளியன்று சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை வருமாறு:– பாஜக தலைவர்கள் உண்மை என்று கூறும் விசயத்தில் எந்த புதிய விசயமும் இல்லை. கடந்த காலத்தில் இடதுசாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட எரிச்சலூட்டுகிற, அலுப்பூட்டுகிற பழைய குற்றச்சாட்டுகளே மறுபடியும் மறுபடியும் கூறப்பட்டுள்ளன. நாட்டின் அறிவுத்தளத்தில் நடைபெறும் விவாதங்களில் இடதுசாரிகள் ஆதிக்கம் செய்வதாக கூறப்படுகிறது. இடதுசாரிஅறிவாளிகளின் கருத்துக்கள் வலியுறுத்தக்கூடியதாகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது அது அப்படியே தொடரவும் செய்யும். ஏனெனில் அவர்களின் அறிவின் வலிமையும், பகுப்பாய்வு முறையும் மற்றும் இந்திய வரலாறு குறித்த ஆய்வும் அப்படிப்பட்ட தன்மையில்  அமைந்துள்ளது.

இத்தகைய உயர்தரமான விவாதத்தை எதிர்கொள்ள முடியாத ஆர்ஸ்ஸ் அமைப்பு, இடதுசாரிகளின் சிந்தாந்த ரீதியான தூண்டுதல் என்று கூறி அறிவாளிகள் மீது அவதூறுத் தகவல்களை அள்ளி வீசியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்நிலையிலுள்ள அறிவுப்பூர்வமான இந்திய மனங்களை இணைத்தற்கு அமித் ஷாவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.அரசின் விருதுகளை திருப்பித்தரும் போராட்டம் என்பது புதியது அல்ல.  சுதந்திரப்போராட்டத்தின் போது இது பல சமயங்களில் நடந்துள்ளது.  குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் தனது ‘நைட்ஹுட்’ எனப்படும் உயரியவிருதை பிரிட்டிஷ் காலனிய ஆட்சி இந்தியாவில் நிகழ்த்திய  வன்கொடுமைகளை எதிர்த்துத்  திருப்பி அளித்தார். தற்போது கருத்துக்களுக்கு இடையே நடக்கும் மோதலில் ‘ஆர்ஸ்ஸ், பாஜகவின் மாற்றுக் கண்ணோட்டம்‘ எதுவும் இப்போது முன்வைக்கப்படவில்லை. கல்வி மற்றும் அறிவுத்தளத்தில் நடைபெறும் விவாதங்களில் ஆர்ஸ்ஸ்ஸின் கருத்து எப்போதும்

Leave a Reply

You must be logged in to post a comment.