இன்று சோவியத் இல்லை.  ஆனால் அது உருவாக்கிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியையும், பண்பாட்டின் ஆரோக்கியத்தையும் அளக்கும் அளவுகோலாக உள்ளது. 1914-ல் தொடங்கி 1919 வரை நீடித்த முதல், உலக யுத்தம் ஐரோப்பிய கண்டத்தையே சீரழித்துக் கொண்டிருந்த காலம். யுத்த நசிவுகளுக்கிடையே ரஷ்யாவில் 1917ஆண்டு அக்டோபர் புரட்சியால் சோவியத் ஆட்சி பிறந்தது. அது பிறந்ததிலிருந்து மேலை நாட்டு ஊடகங்கள் இழிவு செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தன. ஏன்?‘கடந்த கால ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கப் போராட்டக்களத்தில் பிறந்த மார்க்சிச சித்தாந்தத்தில் புடம்போட்ட போல்ஷிவிக் கட்சி வழிகாட்ட தங்களது நாட்டில் வறுமையும், அறியாமையும் இல்லா மானுட சமூகத்தை நிர்மாணிக்க புதிய பாதை போடத் துவங்கியதைத் தான் கொடூரச் செயலாக மேலை நாட்டு ஊடகங்கள் பார்த்தன.’ முதலில் ஏகாதிபத்திய அரசுகள் 1871ல் பாரீஸ் கம்யூனை கிள்ளி எறிந்தது போல் ரஷ்ய செல்வந்தர்களின் வெண்படைக்கு உதவிட படைகளை அனுப்பி சோவியத்தையும் கிள்ளி எறிய தலையிட்டனர். 1917 முதல் 1927 வரை சோவியத் ஆட்சியில் மக்கள் கண்டது உள்நாட்டு யுத்தம்,

மானுடம் மேன்மையுற சோவியத்தின் பங்களிப்புசுற்றிலும் செல்வந்த அரசுகளின் பகைமை, பஞ்சம், தொத்து நோய்கள், உழைக்கும் மக்களின் உயிரிழப்புகள் ஆகியவைகளே.உள்நாட்டு கலவரம் முடிவிற்கு வந்தாலும் பிரபுக்கள், முதலாளிகள்ஆகியோரின் சதிவேலைகள், சோவியத் முன்னோடிகளை தீர்த்துக் கட்டுதல், உற்பத்தி அமைப்புக்களை தகர்த்தல் போன்ற பயங்கரச் செயல்கள் தொடர்ந்தன.சோவியத் முன்னேற வேண்டுமானால் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவ தலையீடு தடுக்கப்பட வேண்டும். அதற்கு பதற்றமற்ற உலக உறவிற்கு அடிப்படையை உருவாக்குவது அவசியம் என்பதை போல்ஷ்விக் கட்சியின் லெனின் தலைமையில் இருந்த அரசியல் தலைமைக் குழு மட்டுமல்ல ஜெர்மன் எல்லையிலே போரிட்ட ராணுவ வீரர்களும் அறிந்திருந்தனர். அதே வேளையில் சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வு ரஷ்ய மக்களுக்கு மட்டும் இருந்தால் போதாது ஐரோப்பிய நாடுகளின் மக்களிடையே இந்த உணர்வு பரவாமல் அமைதியை நிலைநாட்டுவது சாத்தியமல்ல என்பதையும் லெனினைப் போல் போல்ஷ்விக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உணர்ந்து இருந்தனர். என்ன விலை கொடுத்தாவது அமைதியை பெற சோவியத் அரசு முடிவு செய்தது.

லெனின் செய்த முதல் வேலை புரட்சிக்கு முந்திய ரஷ்யஅரசு பிற ஏகாதிபத்தியவாதிகளோடு ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தங்ளை வெளியிட்டு யுத்தம் ஏகாதிபத்திய நாடுகளின் மக்களின் நலனை பாதுகாக்க அல்ல என்ற உண்மையை உலகறியச் செய்தார். இதன் விளைவாக யுத்த எதிர்ப்பு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது. ஆனாலும் தீயஎண்ணம் கொண்ட ஐரோப்பிய அரசுகள் ராணுவ தலையீட்டை தவிர்க்க உயிரைத் தவிர மற்றதை பறிக்கும் நிபந்தனைகளை சோவியத் மீது போட்டன. உழைப்பாளிகளின் உயிர்களை காப்பாற்றினால் போதும் என்று ஜெர்மன் எல்லையிலே அமைதியைக் கொண்டுவர சோவியத் அரசு கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. உணவு உற்பத்தியில் உபரி விளைவிக்கும் உக்ரேன் பகுதியை தனக்கு கொடுத்தால் தான் எல்லையிலே அமைதி என்று ஜெர்மன் அப்பகுதியை தனதாக்கிக் கொண்டது.

சோவியத் மக்களின் அரசு அதிக விலை கொடுத்து பெற்ற அமைதியை நன்கு பயன்படுத்திக் கொண்டது.விவசாயத்தில் கூட்டுப் பண்ணை முறையை அமலாக்கி உணவுப் பஞ்சமிலா நிலையை முதலில் சோவியத் அரசு கொண்டு வந்தது. உற்பத்தி திறனை உயர்த்த ஆய்வுகளை மேற்கொண்டது.சோவியத் கல்விமுறை, சோவியத் மக்களின் ஆரோக்கியத்தை பேணும்முறை சோவியத்தின் அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு முறை. தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் வளர்க்க தொழிற்சலைகளில் பாப்னோவிச் இயக்கம் இளைஞர்களின் துடிப்பை ஆற்றுப் படுத்திய காம்சோமால் இயக்கம் உலக மக்களின் ஆதரவை திரட்ட சோவியத்தின் முயற்சிகள் இவைகள் அனைத்தும் இன்றும் மானுடம் சிறக்க வழிகாட்டுகின்றன. 1939ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும் சோவியத்தும் மோதி ஒருவரையொருவர் அழித்துக் கொள்வர் என்று அமெரிக்க ஜனாதிபதியும், பிரிட்டன் நாட்டு பிரதமரும் கண்ட கனவு பலிக்காமல் போனது. சோவியத்தின் முன்னேற்றம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. 10 ஆண்டில் சோவியத் மக்கள் அற்புதங்ளை சாதிக்க நேர்ந்ததின் மர்மமென்ன? ஒவ்வொருவரும் உழைப்பால் முன்னேற வாய்ப்புக்களை சோவியத் அரசு உருவாக்கியது. திக்கெட்டும் சென்று ஞானத்தைப் பெற கஜானாவில் திரட்டப்பட்டிருந்த தங்கத்தை அள்ளிக் கொடுத்தது.

மக்களை அறிவும் உழைப்புமே செல்வமென கருத வைத்தது. முதலாளிகளின் லாபத்தை குறிவைக்கும் அறிவு அழிவை நோக்கிச் செல்லும். மக்கள் நலனை குறிவைக்கும் அறிவே மானுடம் நீடித்து வாழ வழி வகுக்கும் என்ற உண்மையை பரப்ப பல வழிகளில் முயற்சி எடுத்தது.வறுமையால் இளம் சிறார்கள் குற்றம் புரிவோர்களாக ஆவதை தடுக்க தங்கிப் படிக்கும் கல்விக் கூடங்களை பரவலாக உருவாக்கிய மெக்கரங்கோ கல்விமுறை சோவியத்தில் குற்றம் புரிவோர் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது. அதற்குக் காரணம் அவர் உருவாக்கிய கல்வி கோட்பாடும் சொல்லிக் கொடுக்கும் முறையும் ஆகும். இதே காலத்தில் அமெரிக்காவிலும் கல்வியாளர் ஜான்டேவே இளம்சிறார்களை நல்வழிப்படுத்த கல்வி முறையை புகுத்தினார். இன்றுவரை பலவகைகளில் முன்னேறிய அமெரிக்காவில் குற்றம்புரியும் சிறார்களின் எண்ணிக்கை கூடி வருகிறதே தவிர குறையவில்லை. சோவியத் கல்வி முறையே எங்களது வழிகாட்டி என்று கூறும் சீனாவில் குற்றம் புரியும் சிறார்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.சோவியத் அறிவியல் ஆய்வு கோட்பாடு சமூக உறவுகளோடு இணைத்துப் பார்க்கும் அடிப்படை கொண்டது. சான்றாக ஏகாதிபத்தியவாதிகள் அடிமை நாடுகளைப் பற்றி எழுதி வைத்த வரலாற்றின் பொய்மைகளை சோவியத் வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியதை, அறிவோம், நியூட்டனின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட தொழில்நுட்ப ஏற்றத்தை சோவியத் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டிய பிறகே மேலைநாட்டு அறிவுலகம் உணர்ந்தது. மானுடம் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் நீடிக்க முடியாது என்று ஆதங்கப்பட்ட அறிவுலகம் சோவியத் பிறந்தபிறகே ஒத்துழைக்கும் நடைமுறைகளை அறிந்தது. இது வரலாறு. யாராலும் மறுக்க இயலாது. ஏகாதிபத்தியவாதிகள் மறைக்க முயல்வர். நமது வேலை சோவியத் சாதனைகளை நினைவூட்டுவது ஆகும்.

Leave A Reply

%d bloggers like this: