புதுதில்லி, நவ. 5–

வீரபத்ரசிங் வழக்கு தில்லிக்கு மாற்றம்
இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் மீதான ஊழல் வழக்கு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.

இதற்கிடையே வீரபத்ரசிங் மீதான வழக்கை, வேறுநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வியாழனன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வீரபத்ரசிங் மீதான வழக்கை இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து, தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: