சின்னாளபட்டி:நவ5-

மணல் கொள்ளையால் நீராதாரம் பாதிப்பு காந்திகிராம பல்கலை., துணைவேந்தர் பேச்சு

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பொருளாதாரத்துறையின் சார்பில் இந்தியாவில் நீர்-சுத்தம்- சுகாதாரம் – சிக்கல்களும் சவால்களும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு துணைவேந்தர் முனைவர் சு.நடராஜன் தலைமை வகித்துப் பேசியதாவது:-கிணறு, குளம், ஆறுகள் சரிவரப்பராமரிக்கப்படாததால் மாசடைகிறது. இதனால், நீராதாரம் பாதிக்கப்படுகிது.

நீர் மாசுபடுவதைத் தடுக்க மக்களும் அரசும் துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும். மணல் கொள்ளையாலும் நீராதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அணைகளைஆண்டுதோறும் புதுப்பிக்கவேண்டும் என்றார். அண்ணாமலைப் பல்கலை., பொருளாதாரத்துறைப் பேராசிரியர் முனைவர் இ.செல்வராஜன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ஏ.சுகிர்தாரணி கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார். சமூக அறிவியல் புலத்தலைவர் பேராசிரியர் பி.சுப்புராஜ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பொருளாதாரத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.நேரு வரவேற்றார். (ந.நி)

Leave A Reply

%d bloggers like this: