பாட்னா,நவ.5-

பீகாரில் தேர்தல் முடிந்தது

நவ.8ல் வாக்கு எண்ணிக்கை!
பீகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வியாழக் கிழமையுடன் 5 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர்
8-ஆம் தேதி நடைபெறுகிறது.பீகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 4 கட்டங்களாக 186 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 57 தொகுதிகளுக்கு வியாழனன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 59.46 சதவிகித வாக்குகள் பதிவாகின. அராரியா, தர்பங்கா, கதிகார், கிஷன் கஞ்ச், மாதே புரா, மதபானி, புர்னியா, சகர்சா, சுபால் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரைக் கோடி பேர் வாக்களித்தனர். இறுதிக்கட்ட வாக்குப் பதிவும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட  உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.