மோடி ஆட்சியில் விலைவாசி குறிப்பாக பருப்புகளின் விலை செங்குத்தாக ஏறி வருகிறது என்பது அனைவரும் அனுபவத்தில் அறிந்த ஒன்று. பல வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது போல விலைவாசி பற்றிய வாக் குறுதியையும் மோடி மறந்துவிட்டார். வெளிநாடுகளுக்கு பறந்து செல்வதும் அங்கு சுவிட் சர்லாந்தில் செய்யப்பட்ட செல்பேசியில் “செல்ஃபி” எடுக்கவும் மோடிக்கு நேரம் போதவில்லை. அவருக்கோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்களுக்கோ விலைவாசி உயர்வால் மக்கள் படும் துன்பங்கள் குறித்து நினைக்க ஏது நேரம்?

உயரப் பறக்கும் பருப்பு விலை

மோடி ஆட்சியில் கடந்த ஒரு ஆண்டில் பருப்புகளின் விலை உயர்வு பற்றிய விவரங் கள்: –

பொருள்     ஒரு ஆண்டிற்குபொருள் ஒரு ஆண்டிற்கு தற்போதைய உயர்வு முன்பு விலை/ விலை/ ரூ ரூ/கிலோ ரூ/கிலோகடலைப் பருப்பு 48 75 56துவரம் பருப்பு 83 175 111உளுத்தம் பருப்பு 90 170 89மசூர் பருப்பு 75 100 33பாசிப் பருப்பு 96 160 67இவை அதிகாரப் பூர்வமான விலைப் பட்டியல். கடைகளில் இதைவிட கூடுதலான விலையில்தான் பருப்பு வகைகள் விற்கப் படுகின்றன.பருப்பு விலைகளில் நெருக்கடி உருவாகப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை தெளி வாக தெரிந்திருந்தும் அதனை தடுக்க மோடி அரசாங்கம் தவறிவிட்டது. பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பாராத கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப் பட்டது. அதற்கு பின்னர் தென்மேற்கு பருவ மழை குறைவாகப் பெய்தது. இந்த இரண்டு இயற்கை நிகழ்வுகளையும் ஒரு திறமையான அரசாங்கம் ஆய்வு செய்து நெருக்கடியை முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கத்திடம் மதவெறியை எதிர்பார்க்கலாம்! திறமையை எதிர்பார்க்க முடியுமா?பருப்பு விலை வரும் நாட்களில் குறையுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் தேவைக்கும் உற்பத்திக்கும் மிகப் பெரிய இடைவேளி உள்ளது என்பதை கீழ் கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:தேவை 271 லட்சம் டன்உற்பத்தி 170 லட்சம் டன்பற்றாக்குறை 101 லட்சம் டன் இந்த பற்றாக்குறையை போக்க வேண்டு மானால் சுமார் 101 லட்சம் டன் பருப்பு வகை களை இந்தியா இறக்குமதி செய்தாக வேண் டும். இந்தியாவில் பருப்பு பற்றாக்குறை என்பதால் உலகச்சந்தையில் விலைகள் ஏறத் தொடங்கிவிட்டன. எனவே விலை எந்த அளவுக்கு இறங்கும் என்பது மிகப்பெரிய கேள் விக்குறியாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுமார் ரூ.17,000 கோடியை பருப்பு இறக்குமதிக்கு செலவு செய்கிறது. இத்தொகையை இந்திய பருப்பு விவசாயிகளுக்கு விவசாயம் அதிகரிக்கவும் தொழில்நுட்ப கடனுக்கும் அளித்து உதவினால் தேசம் விரைவில் தன்னிறைவை அடையும் என்பதில் அய்யமில்லை.உலகிலேயே அதிகமாக பருப்புவகை களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான்! உலகில் உற்பத்தியாகும் பருப்பில் இந்தியாவின் பங்கு 23.1 சதவீதம் ஆகும். அடுத்ததாக சீனா 12.08 சதவீதம் உற்பத்தி செய்கிறது. எனி னும் கீழே உள்ள விவரங்கள் தெரிவிப்பது போல இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தியாகும் பருப்பு அளவு மிகவும் குறைவாக உள்ளது:ஒரு ஹெக்டேரில் உற்பத்தியாகும் பருப்பு அளவு/கிலோ:சீனா 1431மியான்மர் 1323கனடா 1892பிரேசில் 1027இந்தியா 641ஒரு புறத்தில் பருப்பு உற்பத்தி அளவில் முதலிடம்; மறுபுறத்தில் உற்பத்தித் திறனில் இறுதி இடம். இந்த முரண்பாடுதான் இந்தியாவில் பருப்பு பற்றாக்குறையை உருவாக்கு கிறது. பருப்பு உற்பத்தியில் முக்கியமாக பழங்குடி இன மக்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்பட வேண் டும். முக்கியமாக நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவற்றுடன் தரமான விதைகளும் நவீன தொழில்நுட்பமும் உத்தரவாதம் செய்தால் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும். அதனை மோடி அரசாங்கம் செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வி!உணவுப் பாதுகாப்பில் பருப்பின் பங்கு

பருப்பு பற்றாக்குறை என்பது வெறும் விலைவாசி உயர்வு தொடர்புடையது மட்டு மல்ல; மக்களின் உணவுப் பாதுகாப்புடனும் தொடர்பு கொண்டதாகும். இந்திய மக்கள் புரதச்சத்து குறைந்தவிலையில் பெறுவது பருப்பிலிருந்துதான். புரதச்சத்து நமது உடலில் வெப்பத்தையும் ஆற்றலையும் உருவாக்கு கிறது. நமது உடல் இயங்க புரதம் மிக மிக அவசியம். விலை அதிகரித்தால் சாதாரண மக்கள் உட்கொள்ளும் பருப்பின் அளவு குறையும். இதன் காரணமாக அவர்கள் பெறும் புரதத்தின் அளவு குறையும். இது உடல் ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கும். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 60 கிராம் பருப்பு தேவை. ஆனால் இந்தியாவில் தனிநபர் சராசரியாக மக்களுக்கு வாங்க முடிவதோ வெறும் 27கிராம் தான்! இதனைக்கூட உத்தரவாதப்படுத்த முடியாத நிலையில் தான் மத்திய மாநில அரசாங்கங்கள் உள்ளன. பருப்பு விலை உயர்வுக்கு தமிழக அரசாங்கம்தான் காரணம் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இந்தக் கூற்று கேலிக்கூத்தானது! பருப்பு விலை உயர்வுக்கு மோடி அரசாங்கத்தின் கையாலாகாத் தனம்தான் முக்கியக் காரணம் என்பதை அனைவரும் அறிவர். பருப்பு பற்றாக்குறை உருவாகும் ஆபத்தை உரிய காலத்தில் உணர்ந்து மாற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது மோடி அரசாங்கம்தான்! பதுக்கல் பேர்வழிகள் ஆயிரக்கணக்கான டன் பருப்பைபதுக்கிட வாய்ப்பு உருவாக்கியது மோடி அரசாங்கம்தான்! விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ஆன்லைன் வர்த்தகம். இதனை தடை செய்ய மறுப்பதும் மோடி அரசாங்கம்தான்! எனவே மாநில அரசாங்கத்தை குறை கூறும் தகுதி பா.ஜ.க.வுக்கு இல்லை.

யானைப்பசிக்கு சோளப் பொரி

அதே சமயத்தில் தமிழக அரசாங்கமும் தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. தமிழக மக்களுக்கு தேவையான அளவு அனைத்து பருப்பு வகைகளையும் நியாயமான விலையில் உத்தரவாதப்படுத்துவது மாநில அரசாங்கத்தின் கடமை. ஆனால் அ.தி.மு.க. அரசாங்கம் அக்கடமையில் தவறிவிட்டது என்பதே உண்மை. தமிழக அரசாங்கம் துவரம் பருப்பை கிலோ ரூ.110க்கு தருவதாக விளம்பரம் செய்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சிஆகிய நகரங்களில் 91 கூட்டுறவு நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி! தனிநபர் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பின் அளவு 10கிராம் என வைத்துக்கொண்டாலும் தமிழகத் தின் தேவை மாதத்திற்கு 16500 டன்! ஆனால் தமிழக அரசு விற்கத் திட்டமிட்டிருப்பதோ வெறும் 500 டன்தான்! தமிழக அரசாங்கத்தின் முயற்சி வெறும் விளம்பரத்திற்காகவா எனும் கேள்வி எழுகிறது.எனவே தேவையான அளவிலும் குறை வான விலையிலும் பருப்பு வகைகளை உத்தரவாதப்படுத்துவது மத்திய – மாநில அரசாங் கங்களின் முன்னுரிமை கடமை ஆகும். பருப்பு வகைகள் மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலைவாசியையும் கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்திய – மாநில அரசாங் கங்களுக்கு உள்ளது. இதனை வலியுறுத்தியே மக்கள் நலக் கூட்டியக்கம் நவம்பர் 3 அன்று மாவட்டத் தலைநகரங்களில் இயக்கம் நடத்துகிறது!

Leave a Reply

You must be logged in to post a comment.