வேடசந்தூர், நவ.5-

தொடர் மழை:-சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் வெங்காயப் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வேடசந்தூரை அடுத்துள்ள தொப்பாநாயக்கனூர், ஆவலாக்கவுண்டனூர், தங்கம்மாபட்டி, புங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் வெங்காயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதனால், அழுகல்நோய் ஏற்பட்டு வெங்காய விளைச்சல் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். வேளாண்துறையும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட வெங்காயப்பயிரை பார்வையிட்டு நிவாரணம் வழங்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply