மறியல், கல்வீச்சு, உருவபொம்மை எரிப்பு சம்பவங்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றம்
சாதிவெறிப் பேச்சால் அமைதியைக் குலைத்தார் அமைச்சர்:

சாதிவெறிப் பேச்சால் அமைதியைக் குலைத்தார் அமைச்சர்

போலீஸ் தடியடி-2000 பேர் கைது
புதுக்கோட்டை, நவ.5-
அதிமுக அமைச்சரின் சாதி வெறிப் பேச்சால், புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டம் வெடித்துள்ளது. மறியல், கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடந்து
வருகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது. பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி? என யோசிக்காத காவல்துறை, அமைச்சர் ஆதரவாக நடப்பதாக நினைத்து, பொதுமக்கள் மீதே தடியடி நடத்தியது, பதற்றத்தை அதிகப்படுத்தி, நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகவும், அதிமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் டாக்டர் சி.விஜயபா°கர். இவர் தனது கட்சியைச் சேர்ந்த கறம்பக்குடி ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாளையும், அவரது கணவர் சொக்கலிங்கத்தையும் சில தினங்களுக்கு முன்பு சாதியைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கெங்கையம்மாள்- சொக்கலிங்கம் சார்ந்த- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வியாழனன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.

அதையொட்டி ஆயிரக்கணக்கானோர் புதுக்கோட்டையில் குவிந்தனர்.இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், போராட்டத்திற்கு வந்தவர்களை திடீரென கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கினர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மோதலாகவும் மாறியது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள், அதிமுக அலுவலகம், கடைகள், நிறுவனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை தடியடி நடத்திவிரட்டியடித்தனர். இந்த தடியடி பிரயோகத்தில் பலர் காயமும் அடைந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக போலீசார் நடத்திய தடியடிசம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகரில் கடைகள் மூடப்பட்டு உள்ளன. பல இடங்களில் அமைச்சரின் உருவ பொம்மைகள் எரிப்பும், சாலைகளில் மரங்களை வெட்டிப் போடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சிபிஎம் கண்டனம்

Leave A Reply