கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் அதிமுக ஆட்சி, ஐ.சி.யு. வார்டில் இருப்பதுடன், துருப்பிடித்து விட்டது – திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

ச.சா – பக்கத்து பெட்ல இருந்ததுனால நல்லாவே தெரிஞ்சுருக்குமே..!!

* * *

சகிப்புத்தன்மையற்ற நாடாக இந்தியா இருக்கப்போவதில்லை – மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.

ச.சா – உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..?

* * *

இரு திராவிடக்கட்சிகளுக்கும் எதிரான அலை தமிழகத்தில் வீச வருகிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்.

ச.சா – மருத்துவக்கல்லூரி முறைகேடுங்குற அலையும் வீசுதே..?

* * *

தனி நபர்களை நம்பி காங்கிரஸ் இல்லை – காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு.

ச.சா – ஆமா… கோஷ்டி, கோஷ்டியா இருக்குறதுனால அத நம்பித்தான் இருக்கு..!!

* * *

Leave A Reply

%d bloggers like this: