புதுதில்லி, நவ.5-

கொலிஜியம் முறையை மேம்படுத்துவது தொடர்பான வழக்கு 18,19-ம் தேதிகளில் விசாரணை நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை `மேம்படுத்துவது’ தொடர்பான வழக்கு விசாரணை வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகளை நியமனம் செய்வது, பணிமாற்றம் செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் கொலிஜியம் குழுவை மேம்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, கொலிஜியம் முறையை மேம்படுத்துவது தொடர்பாக சட்டஅமைச்சகத்தின் இணையதளத்தில் வரும் 13-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துதெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

அனைத்து மாநில பார் கவுன்சில்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலிடம் நீதிபதிகள் வலியுறுத்தினர். அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தேர்வு செய்வது, கொலிஜியம் குழுவை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளை தொகுத்து வழங்குவதற்காக குழு ஒன்றையும் அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: