சென்னை, நவ.5-

எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்:-சிபிஎம் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:- “தமிழகத்திலுள்ள இலங்கைத்தமிழ் அகதிகளின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நவம்பர் 4 புதனன்று சென்னை மியூசிக் அகாடமி ஹாலில் இந்து பத்திரிகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், முன்னாள் இந்து முதன்மை ஆசிரியர் என்.ராம், ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரஹாசன் உள்பட பல இயக்கப் பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்கள். நிகழ்ச்சி நிறைவு பெற்று அனைவரும் கலைந்து செல்கிற சமயத்தில் புதுக்கோட்டையைச் சார்ந்த பிரபாகரன் என்பவர், எம்.கே.நாராயணன் அவர்களை தனது காலணியால்  தாக்கியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஜனநாயகப் பூர்வமான முறைகளில் வெளிப்படுத்துவதே சரியான அணுகுமுறை
யாகும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக, வன்முறையில் ஈடுபடுவது சரியான அணுகுமுறையல்ல. எம்.கே.நாராணயன் தாக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave A Reply