சென்னை, நவ.5–

எம்.கே.நாராயணனை தாக்கிய நபர் சிறையில் அடைப்புமுன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சென்னையில் காலணியால் அடித்து தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் பிரபாகரன் என்பதும், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இலங்கை தமிழர்களின் பின்னடைவுக்கு எம்.கே.நாராயணன்தான் காரணம் என்பதால், அந்த ஆத்திரத்தில் அவரைத் தாக்கியதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து, பிரபாகரன் மீது, கொலை மிரட்டல், (506 (2), பொது இடத்தில் ஒருவரை தாக்கி அவமானப்படுத்துதல் (356), தாக்குதலில் ஈடுபடுதல் (323, 324) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் சைதாப்பேட்டை 18-வதுகுற்றவியல் நீதிபதி மோகனாவின் நீலாங்கரை வீட்டில் வியாழனன்று அதிகாலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது பிரபாகரனை 15 நாட்கள் காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பிரபாகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Leave A Reply

%d bloggers like this: