நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்எஸ்எஸ் எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப் பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சதி காரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண் டிருக்கிறோமா” என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. மாற்றுக் கருத்து என்பது ஜனநாயகப் பூர்வமான சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவது போன்றே எந்தவொரு பகுத்தறிவுமிக்க, நியாயமானதொரு சமூகத்திலும் இயல்பான ஒன்றாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. காரணங்களின் அடிப்படை யிலான மாற்றுக் கருத்துக்கள் ஊக்குவிக்கப் படுகின்றன. எனினும், தற்போது இந்திய தேசத்தில் காரணங்களுடனான மாற்றுக் கருத்தை தெரிவிப்பதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகிறது. தற்போதைய இந்திய அரசின் கொள்கையின் ஒரு பகுதியாகவே இது மாறியுள்ளது. இதன் காரணமாக, மாற்றுக் கருத்தினை தாங்கிக் கொள்ள இயலாத போக்கு அதிகரித்து வருகிறது. எனவேதான், கர்நாடக மாநிலத்தில் அக்டோபர் 22ம் தேதி யன்று ஹூசாங்கி பிரசாத் என்ற ஓர் இளம் தலித் மாணவர்-எழுத்தாளர் கடத்தப் பட்டு, சாதிப் பாகுபாடு குறித்து எழுதியதற்காகவும், இந்து கடவுள்களை அவமதித்ததாகவும் அடித்து நொறுக்கப்பட்டார்.

எங்கே செல்கிறது எனது நாடு?சாதிய அமைப்பு என்பது இந்துமத சமூக அமைப்பின் சாபக்கேடாக இருந்தபோதும், தற்போது அது மிகுந்த வீரியத்துடன் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த மாதம் பரிதாபாத்தில் தலித் குடும்பத்தின் மீது கும்பலொன்று தொடுத்த தாக்குதலில் அக்குடும்பத்தைச் சார்ந்த இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது போன்ற கொடூரமான சம்பவம் உள்ளிட்டு தலித்துகளின் மீதான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் இது பிரதிபலிக்கிறது. இத்தகைய தாக்குதல்களோடு மட்டுமின்றி, தைரியமாக மாற்றுக் கருத்தை முன்வைத்ததற்காக கிரின்பீஸ் போன்ற பிரபலமான அமைப்புகள் மற்றும் டீஸ்டாசெதல்வாத் போன்ற செயல்பாட்டாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

அநீதிகளுக்கு செயலூக்கம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ (எச்)சின்படி, “அறிவியல் மனநிலை, மனித நேயம், புலனறிவு ஆகிய வற்றின் அடிப்படையில் ஆய்ந்து செய்யப் படும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை உருவாக்குவது” என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். எனி னும், காரண காரியங்களையும், பகுத்தறிவையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல் மனநிலைக்கு அரசே தற்போது மிகப் பெரிய தடையாக உள்ளது. அறிவியல் குறித்து இத்தகைய புரிதலின்மை இதற்கு முன்பு வேறெந்த அரசுக்கும் இருந்தது கிடையாது. இதன் காரணமாக, தேசத்தின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலில் எதிர்மறை விளைவுகள் பெருமளவில் ஏற்படக் கூடும்.“கிரகங்களுக்கிடையே பயணிக்கக் கூடிய மிகப் பெரிய விமானங்கள் நம்மிடம் இருந்தன; மனித உடலின் மீது யானையின் தலையைப் பொருத்தும் (பிளாஸ்டிக் சர்ஜரி) திறனை நாம் கொண்டிருந் தோம்” என்றெல்லாம் கடந்த காலம் குறித்து அபத்தமான கூற்றுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மத நம்பிக்கைகளுக்கு பொருந்தக் கூடிய வகையில் புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களையும், கடவுளர்களையும் வரலாற்று நாயகர்களாக சித்தரித்து, அதன் மூலம் வரலாற்றைத் திரிக்கும் வேலையும் நடைபெறுகிறது. மதச்சார்பின்மையின் மாண்புகளும், பகுத்தறிவும் மதிக்கப்படுவதில்லை என்பதனைக் கூட விட்டு விடுவதாகக் கொள்வோம். ஆனால், இந்த நாட்டின் சட்டத்தையே கூட எள்ளளவும் மதிக்காத அமைப்புகளின் குறிப்பான ஆதரவுடன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நாடு முழுவதிலும் திணித்திடுவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவசேனா கட்சியானது பாஜகவுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதும்கூட, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹமூத் கசூரி எழுதிய புத்தகத்தை வெளியிட்டதற்காக அப்சர்வர் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் சுதீந்திர குல் கர்னியின் முகத்தில் கருப்பு மையை ஊற்றியது, மும்பையில் நடக்கவிருந்த பாகிஸ்தானி பாடகர் குலாம் அலியின் இசைநிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகங்களை சூறையாடியது என்பன போன்ற அவர்களது சமீபத்திய நடவடிக்கைகள் இதற்கான உதாரணங்கள் ஆகும். சுதந்திர சிந்தனையாளர்கள் மற்றும் தலித்துகள் மீது அவர்கள் தாக்குதல் தொடுக்கிறார்கள். அத்துடன் சிறுபான்மை மக்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக உணரும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன. மிகச்சமீபத்தில், மிகத்தெளிவாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றில், மாட்டுக் கறியை சாப்பிட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தில்லிக்கு அருகே தாத்ரியில் முகம்மது அக்லாக் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது மகனைக் கடுமையாகக் காயப்படுத்தி னர். பாஜகவின் நாடாளு மன்ற உறுப்பினர்களான சங்கீத் சோம் மற்றும் சாக்ஷி மஹராஜ் ஆகியோர் இச்சம்ப வத்தை மிகவும் நியாயப்படுத்திப் பேசினர். இந்துமதத்தைச் சார்ந்த மக்கள் தொகை எண்ணிக்கையை விட அதிகமானதொரு வேகத்தில் இஸ்லாமிய மக்களின் எண் ணிக்கை அதிகரிப்பதாகக் கூறி, அதனைத் தடுத்திட, ஐந்து அல்லது ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து இந்துக்களுக்கும் சன்மானம் தருவதாக இந்துத்துவா அடிப்படைவாத அமைப்பு ஒன்று அறிவித்தது. இதனிடையே, மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே இறந்த நாளான நவம்பர் 15ஆம் நாளை தியாகிகள் தினமாகக் கொண்டாடுவது என இந்து மகாசபை அறிவித்துள்ளது.

தனியார்மயமாக்கப்படும் அடிப்படைச் சேவைகள்

எந்தவொரு நல்ல ஜனநாயக அமைப்பின் கீழும், பன்னிரண்டாம் வகுப்பு வரை யிலான (18 வயது வரையிலான) கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் அரசாலேயே அளிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில், பண வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்றாககல்வியும், சுகாதாரமும் பெருமளவில் தனியார்மயம் ஆக்கப்படுவதோடு, வர்த்தகமயம் ஆக்கப்பட்டும் வருகிறது. இத்தகைய நடவடிக்கை எதேச்சதிகாரத்தை உருவகப்படுத்துகிற அம்சமேயாகும். நாட்டின் உயர்பதவிகளை நிரப்புவதிலும் கூட, தகுதியை விட அரசியல் ஆதாயத்திற்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்புக்குமே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநராக கஜேந்திர சௌகான் நியமிக்கப்பட்டதும், அதற்கு மாணவர்கள் மற்றும் திரைப்பட இயக்கு நர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பும் இதற்கு ஓர் உதாரணமாகும். இதற்கு முன்னர் வேறு எந்த அரசும் செய்திடாத வகையில், நாம் எதனைஉண்ணுவது, என்ன உடை உடுத்துவது, யாரை நேசிப்பது, எத்தகைய புத்தகங்களைப் படிப்பது, எந்த திரைப்படங்களைப் பார்ப்பது என்பவை குறித்தெல்லாம் அரசு தான் முடிவெடுக்குமாம். தற்போதைய அரசின் செயல்பாட்டில் இத்தகைய கலாச்சார சகிப்பின்மை ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக உள்ளது. மாட்டிறைச்சியை சாப்பிடுவது என்பது பண்டைய இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது என்பது இந்த அரசுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. ஆயுர்வேத நூலான சரகசம்ஹிதாவில், மாட்டிறைச்சியின் தரம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது “வாயுத் தொல்லை, விட்டு விட்டு வருகின்ற காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வுஆகியவற்றின் காரணமாக உடல் இளைத்திடுபவர்களுக்கும், கடுமையான உடல் உழைப்பின் காரணமாக அதிக அளவில் பசிஎடுப்பவர்களுக்கும் மாட்டிறைச்சி மிகவும் பயனுள்ளது.” எந்த மதமும் மற்ற மதத்தை விட மேலானதல்ல என்பதனை இந்துத் துவாவிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் உணராது உள்ளனர். மேலும், அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுடனான, விவேகமான சிந்தனைக்கு எதிரான கருத்துக்கள்எல்லா மதங்களிலும் உள்ளன என்பதனையும் உணராது இருக்கின்றனர்.அனைத்து எதேச்சதிகாரங்களும் அறிவாற்றலுக்கு எதிரானவையே என்பதனை வரலாறு கூறுகிறது. எனவே, 300க்கும் அதிகமான ஆளுமைகள் ஏன் தேசிய விருதுகளை திருப்பி அளித்தார்கள் என்பதற் கான காரணத்தை உள்ளார்ந்து ஆய்வு செய் வதற்கு பதிலாக, இத்தகைய ஆளுமைகளை தேச நலனுக்கு எதிரானவர் களாகவும், மாற்றுக் கருத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் தற்போதைய அரசுசித்தரிப்பதில் ஆச்சரியப்பட எதுவு மில்லை. மேலே பட்டியலிடப்பட்டவை எல்லாம் நடந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளில் அங்கொன்றும், இங்கொன்றும் ஆனவையே. மொத்த நிகழ்வுகளின் ஒரு சிறு பகுதியே இவை. இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை சீரழித்து, அதனை இந்து மதவாத எதேச்சதிகார அமைப்பாக மாற்றுவதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியன வற்றின் முக்கியமான நோக்கமாகும் என் பதற்கு பரவலான சான்றுகள் உள்ளன. உயிரியல் துறையுடன் தொடர்புள்ள வன் என்ற அடிப்படையில், மிக முக்கிய மான உயிரியல் கோட்பாடு ஒன்றை மேற்கோள் காட்டி எனது கட்டுரையை நிறைவு செய்திட விரும்புகிறேன். “பன்முகத்தன்மை (ஏயசநைவல) தான், பரிணாம வளர்ச் சிக்கு வழிகோலும். ஒற்றைத்தன்மை (ழடிஅடிபநநேவைல) அழிவுக்கே இட்டுச் செல்லும். பன்முகத்தன்மை என்பதே இந்தியா வின் மிகப் பெரிய சொத்தாகும். பன்முகத் தன்மை என்பது அதன் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளது. இந்திய நாடு ஓர் இந்து மதவாத எதேச்சதிகார நாடாக மாறிடக் கூடாதுஎன நாம் விரும்பினால், நமது செயல்பாடுகளின் மூலம் இத்தகைய பன்முகத்தன்மை யினை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

(டாக்டர் பார்கவா, தேசிய அறிவு ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார். தனது பத்மபூஷன் விருதை சமீபத்தில் திருப்பி அளித்தவர் இவர்.)

நன்றி: 03.11.2015 ‘தி இந்து’ நாளிதழ் தமிழில்: எம். கிரிஜா

Leave a Reply

You must be logged in to post a comment.