திருச்சிராப்பள்ளி,நவ.4-

டெங்கு பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வுக்குப்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-  தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். பள்ளிசிறார்களுக்கான மருத்துவகுழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதத்திற்குத் தேவையான மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 34 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பேருக்கு மட்டுமே இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2012ம் ஆண்டு 13 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நடப்பாண்டில் 2 ஆயிரமாக உள்ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: