கார்ப்பரேட் லாபவெறிக்கு காவு தொழிலாளர்களா?

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் களின் லாபவெறிக்கு நேரடியாக இந்தியத் தொழிலாளர்களை காவு கொடுப்பதென மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. இதுவரை ஊக்கக்தொகை, மீட்பு நிதி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை கார்ப்பரேட்களுக்கு மடைமாற்றம் செய்துவந்தது. தற்போது அதுவும் போதாது என்று, நேரடியாக தொழிலாளர்களின் ரத்தத்தையும் அட்டையாய் உறிஞ்சிக்கொள்ள கார்ப்பரேட்களுக்கு சட்டப் பூர்வமாக அனுமதியளிக்க துவங்கியிருக்கிறத.  ஜப்பானில் கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டத் தில், “உலகிலேயே மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். உங்களுக்காக இந்தியா காத்திருக்கிறது, வாருங்கள். இந்தியாவில் தொழில் தொடங்குங்கள்” என இந்தியத் தொழிலாளர்களின் வியர்வையையும், ரத்தத்தையும் அந்நிய மண்ணில் விலைபேசிய முதல் பிரதமர் நரேந்திர மோடிதான். அதன் தொடர்ச்சியாகவே, நெடுங்காலமாய் போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளையும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் மோடி அரசு முதலாளிகள் நலச்சட்டமாக மாற்ற முயற்சிக்கிறது. நாற்பதுக்கும் குறைவான தொழிலாளர்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலைகளுக்கு, தொழிற் சாலை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க தீர்மானித்திருக்கிறது. அப்படியென்றால்,  நாற்பது பேருக்கும் குறைவான தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் நிறுவனங்கள் அவர்களை கொத்த டிமைகளாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள். வேலை நீக்கம் செய்யப்பட்டால் கூட, தொழிற்தகராறு சட்டத்தின்படி தொழிலாளர் நீதிமன்றத்தையோ மற்ற நீதிமன்றத்தையோ நாட முடியாது . இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் உதவியால் 60 பேர் பார்த்த வேலையை இன்று ஒரு தொழிலாளியே பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வைத்து உழைப்பை மதிப்பீடு செய்வது சுரண்டலின் நவீன வடிவமே ஆகும். தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி யில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பது எனவும் மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவுசெய்திருக்கிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைச் சட்டப்படி இரவு நேர பணிகளில் பெண்கள் வேலை செய்ய தடை செய்யப்பட்டிருக் கிறது. ஆனால் இனி இரவு நேரங்களிலும் பெண்கள்வேலை செய்யலாம் என சட்டத்திருத்தம் செய்திருக் கிறது. அதாவது அபாயகரமான பணிகளில் இதுவரைபெண்களையும், சிறுவர்களையும் பயன்படுத்தத் தடை இருந்தது. அந்தத் தடை முற்றிலுமாக நீங்கு கிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலன் உள்ளிட்டவை தொடர்பான கொள்கைகளை வகுக்கும் அதிகாரம், இதுவரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இருந்து வந்தது.

இந்த அதிகாரத்தை தற்போது தொழிலதிபர்களை கொண்ட அமைப்பிடம் ஒப்படைக்க மத்திய அரசுமுடிவு செய்திருக்கிறது. அதாவது, பாலுக்குக் காவலனாக பூனையை நியமிக்க முடிவு செய்திருக்கிறது. இது தொழிலாளர்கள் உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசன அமைப்புநாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு வழங்கி யிருக்கும் அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும். அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். தொழிலாளி வர்க்கம் நீண்ட காலமாக போராடிப் பெற்ற உரிமைகளையும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையும் கார்ப்பரேட்களின் கோரப் பசிக்கு, பாய் விரித்து பந்தி வைக்க மோடி அரசு தயாராகி வருகிறது. இதைமுறியடித்திடவும், பெற்ற உரி மையை பாதுகாத்திடவும், கோடிக்கால் பூதமென தொழிலாளி வர்க்கம் அணிவகுத்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.