மும்பை, அக். 30-

இளம்பெண் எஸ்தர் அனுயாவை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த வழக்கில், குற்றவாளி சந்திரபான் ஸ்னாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து, மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரிதினும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளியை சாகும்வரை தூக்கிலிடுமாறு, நீதிபதி விருஷாலி ஜோஷி, தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் அனுயா (23). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், மும்பையின் குர்கான் நகரில் உள்ள டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். 2014 ஜனவரி 5 அன்றுஇவர் வாடகை காரில்சென்ற போது கொடூரமான முறையில் பாலியல்வன்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை மும்பைமகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. 39 சாட்சிகள் வாக்குமூலம்அளித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி விருஷாலி ஜோஷி,வெள்ளிக்கிழமையன்று தண்டனையை அறிவித்தார். குற்றவாளியான சந்திரபான் ஸ்னாப்பை சாகும்வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பு வழங்கினார். இந்ததீர்ப்பை எஸ்தர் அனுயாவின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

Leave A Reply