2ஜி ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் : சிபிஐ மனு மீது 30-ம் தேதி விசாரணை

புதுதில்லி :-

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டு உள்ளநிலையில், இந்நிறுவனங்கள் செய்த முறைகேடுகள் பற்றிய கூடுதல் ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியுள்ளது. இந்த கூடுதல் ஆதாரங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று தில்லி சிறப்பு  நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதாடினார். அப்போது, சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: