உள்ளாட்சி தேர்தல் நாட்களில் மதுவிற்பதை தடுக்கக் குழு தேர்தல் ஆணையம் தகவல்

இடுக்கி:-

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் முழுவதும் வருகிற 2, 5-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 7-ந்தேதி நடக்கிறது.  இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நாட்களில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா? என கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்கதேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி இடுக்கிமாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பகல், இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். உள்ளாட்சி தேர்தல் பணியில் கலால்துறையினரையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலால்துறையினர் 176 பேரில், 88 பேர் இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ளவும், 88 பேர் எர்ணாகுளத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் மாநிலம் முழுவதும் கலால்துறையினரில் பெரும்பாலானவர்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். கலால்துறையினரை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதால், கேரளாவில் மதுபான கடத்தல் சோதனை மந்தநிலையில் உள்ளது. இந்த பிரச்சனை குறித்து கலால்துறை இணைஆணையாளர் சுரேஷ்பாபு கூறும்போது, கலால்துறை ஊழியர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தினாலும்,  இருக்கும் ஊழியர்களை கொண்டு சோதனை தீவிரபடுத்தப்படும் என்றுதெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.