பாட்னா,அக். 28 –

பீகாரில் புதனன்று நடைபெற்ற 3-ஆவது கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 53.32 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ஏற்கெனவே 2 கட்டமாக 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. மூன்றாவது கட்டமாக புதனன்று, பாட்னா, வைஷாலி, சரண், நாளந்தா, பக்ஸார், போஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மொத்தம் 53.32 சதவிகித வாக்குகள் பதிவாகின. நவம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் முறையே நான்காவது, ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.