சி.பி.ஐ. அதிகாரிகள் இந்தோனேசியா விரைந்தனர்

புதுதில்லி,அக். 28–

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டவரும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியுமான சோட்டாராஜன்(55). கடந்த சனிக்கிழமையன்று இந்தோனேசியாவில் இண்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சோட்டா ராஜனை இந்தியா கொண்டுவர சி.பி.ஐ. அதிகாரிகள் குழு, இந்தோனேசியாவுக்கு விரைந்துள்ளது. இந்த குழு, இந்தோனேசிய போலீசார் உதவியுடன், சோட்டா ராஜனை விமானத்தில் தில்லிக்கு அழைத்து வருகிறார்கள். முன்னதாக சோட்டா ராஜனிடம் விசாரணை நடத்த இந்திய போலீஸ் தங்களிடம் உதவிகேட்டிருப்பதை பாலி தீவின் சி.ஐ.டி. அதிகாரி மேஜர் ரெயின்ஹார்டு உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், தாங்கள் சோட்டா ராஜனை கைது செய்தபோது,

அவர் இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தன்னை ஜிம்பாப்வே அழைத்து செல்லுமாறு கெஞ்சியதாகவும், தனது மனைவி மற்றும் தந்தையைப் போல தன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்று அஞ்சியதாகவும் குறிப்பிட்ட ரெயின் ஹார்டு, எனினும் அவரை இந்தியா கொண்டு செல்வது குறித்து சி.பி.ஐ தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: